tamilnadu

img

குடியிருக்கும் நிலத்தை அபகரிக்க முயற்சி குடும்பத்துடன் ஆட்சியர்

தருமபுரி, மே 27-குடியிருக்கும் சொந்தநிலத்தை தனிநபர் அபகரிக்க முயற்சிப்பதாக கூறி தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் குடும்பத்துடன் தீக்குளிக்க முயற்சியில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.தருமபுரி மாவட்டம், அரூர் அடுத்துள்ள இளையாம் பட்டிகிராமத்தைச் சேர்ந்த சுவாமிநாதன் என்பவர் தனக்கு சொந்தமான இடத்தில் 40, ஆண்டுகாலமாக குடியிருந்து வருகிறார். சிலநபர்கள் இவர் குடியிருக்கும் நிலத்தை அபகரிக்கும் நோக்கத்துடன் செயல்பட்டு வருகின்றனர். இந்நிலையில், திங்களன்று தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு சுவாமிநாதன் குடும்பத்துடன் மனு அளிக்க வந்தார். அப்போது தீக்குளிக்கும் நோக்கத்தோடு தன் வைத்திருந்த மண்ணென்னை கேனை எடுத்தார். இதனை பார்த்த காவல்துறையினர் மண்ணெண்ணை கேனை பறித்தனர். இதனையடுத்து சுவாமிநாதனை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்க காவல்துறையினர் அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் காரணமாக ஆட்சியர் அலுவலகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.