கோவை, ஜூலை 15– சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஓய்வூதியர்களுக்கு சட்டரீதியான ஓய் வூதியம் வழங்க வலியுறுத்தி திங்க ளன்று சத்துணவு, அங்கன்வாடி ஓய்வூ தியர் சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட் டம் நடைபெற்றது. தமிழ்நாடு சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஓய்வூதியர் சங்கத்தின் சார்பில் கோவை தெற்கு வட்டாட்சி யர் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் பி.வீரபத்திரன் தலைமை தாங்கினார். கோரிக்கையை விளக்கி மாவட்ட செய லாளர் ஆர்.இராஜகோபால் உரை யாற்றினார். போராட்டத்தை வாழ்த்தி அரசு ஓய்வூதியர் சங்கத்தின மாநில துனை தலைவர் எஸ்.சந்திரன், அரசு மாவட்ட செயலாளர் எஸ்.மதன், சத்துணவு ஊழியர் சங்கத்தின் முன்னாள் மாநில தலைவர் கே.பழனிச்சாமி, எஸ்.ஜி.வெங்கடசுப்பிரமணியன், எஸ்.சாரதா, சாந்தகுமாரி, ஜி.ஆனந்த வள்ளி உள்ளிட்டோர் உரையாற்றி னர். முன்னதாக ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்கள், குடும்ப ஓய்வூதி யம் வழங்கப்பட வேண்டும். ஓய்வூதி யர்களை மருத்துவக்காப்பீடு திட்டத் தில் இணைத்து கட்டணம் இல்லா மருத்துவ சிகிச்சை அளிக்க வேண்டும். இலவச பேருந்து வசதி செய்து தர வேண்டும். ஓய்வு பெறுபவர்களுக்கு உடனே பணப்பலன்கள் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக் கங்களை எழுப்பினர். முடிவில் தமிழி ரசி நன்றி கூறினார்.