கவனமாக செல்ல வனத்துறை எச்சரிக்கை
உதகை, நவ.10- கூடலூர் சுல்தான் பத்தேரி சாலையில் புலி நடமாட்டம் உள்ளதால் வாகன ஓட்டி கள் கவனமாக செல்ல வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். நீலகிரி மாவட்டம், கூடலூர், மசின குடி, முதுமலை ஆகிய பகுதிகள் தமிழக - கர்நாடக கேரள எல்லையில் அமைந்துள் ளன. இப்பகுதிகளில் முதுமலை புலிகள் காப்பகம் மற்றும் பந்திப்பூர் புலிகள் காப்ப கம், முத்தங்கா புலிகள் காப்பகம் ஆகியவை அடுத்தடுத்து அமைந்துள்ளன. இங்கு காட்டு யானைகள், புலிகள், சிறுத்தை, கரடி உள்ளிட்ட வன விலங்குகள் அதிகள வில் உள்ளன. மழைக் காலங்களில் இந்த புலிகள் காப்பகம் பசுமையாக காட்சிய ளிப்பதால், அனைத்து விலங்குகளும் சாலை யில் வலம் வரத்துவங்கிவிடும். குறிப்பாக, யானைகள் சாலையோரங் களில் கூட்டம் கூட்டமாக வலம் வருவது வழக்கம். இதேபோல், மான் கூட்டங்களும் வலம் வருவது வழக்கம். இதனை சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்து செல்கின்றனர். ஆனால், அரிதாகவே புலிகளை காண முடியும். புலிகள் காப்பகங்களிலும் புலிகள் அதிகளவு உள்ள போதிலும், எப்போதாவது தான் சுற்றுலா பயணிகளின் கண்களுக்கு காட்சியளிக்கும். இந்நிலையில், கூடலூர் சுல்தான் பத்தேரி செல்லும் சாலையி்ல் சனியன்று இரவு புலி ஒன்று நடந்து சென்றதை கண்ட வாகன ஓட்டிகள் அச்சமடைந்தனர். சிறிது தூரம் சாலையிலேயே நடந்து சென்ற புலி வனப்பகுதியில் சென்று மறைந்தது. இதுகுறித்து வனத்துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது. இதையடுத்து இரவு நேரங்களில் பாட்டவயல் வழி பத்தேரி செல்லும் அனைத்து வாகன ஓட்டிகளும் கவனமாக செல்ல வனத்துறையினர் அறி வுறுத்தியுள்ளனர்.