tamilnadu

காந்திக்கும் கோட்சேவுக்கும் நடக்கும் போராட்டம் இந்த தேர்தல்

நாகர்கோவில்,ஏப்.1 -காந்திக்கும், கோட்சேவுக்குமான போராட்டம்தான் இந்த தேர்தல் என காங்கிரஸ் தேசிய செயலாளர் சஞ்சய் தத் கூறினார்.காங்கிரஸ் தேசிய செயலாளரும், தமிழக காங்கிரஸ் பார்வையாளருமான சஞ்சய்தத் நாகர்கோவிலில் செய்தியாளர்களுக்கு ஞாயிறன்று அளித்த பேட்டியில் கூறியதாவது:மக்களின் வங்கிக் கணக்கில் 15 லட்சம் ரூபாய் போடுவதாக கூறியதை செய்யவில்லை. பணம் மதிப்பிழப்பின் போது, நாட்டில் அசாதாரணமான சூழ்நிலை நிலவியது. வங்கிகளில் கடன் வாங்கிக்கொண்டு மோசடி செய்த நீரவ் மோடி, விஜய் மல்லையா போன்றவர்களை வெளிநாட்டிற்கு அனுப்பிவைத்தனர். ‘காவலன்’ எனதன்னை அழைத்துக் கொள்ளும் மோடி கார்ப்பரேட் முதலாளிகளான அதானி, அம்பானிகளுக்கும், நீரவ் மோடி, விஜய்மல்லையா போன்றவர்களுக்கு காவலனாக உள்ளார்.சிறுபான்மை மக்களுக்கு எதிரான தாக்குதல்கள், கடந்த ஐந்து ஆண்டுகளில் அதிகரித்துள்ளன. பசு பாதுகாவலர்கள் என்ற பெயரில், விஷ்வ இந்துபரிஷத்,பஜ்ரங்தள், ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர் அப்பாவிகள் மீது தாக்குதல் நடத்தினர்.


இபிஎஸ், ஓபிஎஸ் ஆகியோர் மோடியின் கைப்பாவைகளாக செயல்பட்டு வருகின்றனர். டெண்டர் விசயங்களில் முதல்வர், துணை முதல்வர் மீது குற்றச்சாட்டு உள்ளது. அமைச்சர்கள் மீது குட்கா வழக்குகள் உள்ளன. தமிழகஅரசை மோடி அரசு பொம்மலாட்டம் போன்று ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறது. ராகுல் காந்தி அறிவித்துள்ள ஏழைமக்களுக்கான குறைந்தபட்ச ஊதிய திட்டத்தில், 14 கோடி ஏழைகள் பயன்பெறுவர். பெண்களுக்கு அரசு வேலைவாய்ப்பில், 33 சதவீதஇட ஒதுக்கீடு வழங்கப்படும் என ராகுல்காந்தி கூறியுள்ளார். நாங்கள் ஆட்சிக்கு வந்ததும், ஜி.எஸ்.டி.யை மறு சீரமைப்பு செய்வோம். 

இவ்வாறு அவர் கூறினார். 





;