கோவை, மார்ச் 17- கொரோனா வைரஸ் ஏற்படுத்தி யுள்ள அச்சுறுத்தல் காரணமாக கோவை மாநகர சாலைகளில் பொது மக்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடி காணப்படுகிறது. உலகம் முழுவதும் அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. இதனால் தமிழக அரசு வரும் மார்ச் 31ஆம் தேதி வரை பொழுது போக்கு அம்சங்களுக்கும், மக்கள் அதி கமாகக் கூடும் இடங்களுக்கும் தடை விதித்துள்ளது. இதனால் செவ்வா யன்று காலை முதல் கோவை மாநகரம் வெறிச்சோடி காணப்படுகிறது. அதே போல், வணிக நிறுவனங்கள், பள்ளி கள், கல்லூரிகள், திரையரங்குகள், பொழுதுபோக்கு இடங்கள் என பல் வேறு பகுதிகளில் மக்கள் நடமாட்டம் இன்றி உள்ளது. இந்த நிலையில், பாதுகாப்புப் பணி யில் ஈடுபடும் காவலர்கள் முன்னெச்ச ரிக்கை நடவடிக்கையாக முகக்கவசம் அணிந்து பணி செய்ய வேண்டும் என மாநகர காவல் ஆணையாளர் சுமித் சரண் மற்றும் துணை ஆணையாளர் பாலாஜி சரவணன் ஆகியோர் அறிவு றுத்தியுள்ளனர். இதனையடுத்து கோவை மாநகர காவல் துறையினர் காவல் நிலையங்க ளிலும், பொதுமக்கள் கூடும் இடங்க ளிலும் முகக்கவசம் அணிந்த படி பணி புரிந்து வருகின்றனர். அதேபோல் போக்குவரத்து போலீசாரும் முகக்க வசம் அணிந்து சாலைகளில் போக்கு வரத்தை சரி செய்து வருகின்றனர்.
கோவையில் கண்காணிப்பு மையம்
கொரோனா வைரஸ் தாக்கத்தின் எதிரொலியாக கோவை விமான நிலை யத்திற்கு குறிப்பிட்ட நாடுகளிலி ருந்து வரும் 60 வயதுக்கு மேற்பட்ட வர்களை தனிமைப்படுத்தி கண்கா ணிக்க 100 படுக்கை வசதிகளுடன் கூடிய கண்காணிப்பு மையம் அமைக் கப்பட்டுள்ளது. வைரஸ் அறிகுறிகளுடன் விமான நிலையம் வரும் நபர்கள் சுகாதா ரத்துறையின் ஸ்கிரீனிங் சோதனைக் குப் பிறகு கோவை அரசு மருத்துவ மனை மற்றும் இஎஸ்ஐ மருத்துவம னைகளில் அனுமதிக்கப்பட்டு ஆய் வுக்கு உட்படுத்தப்படுகின்றனர். இத னிடையே தற்போது, விமான நிலை யம் மூலம் குறிப்பிட்ட 10 நாடுகளில் இருந்து வரும் 60 வயதுக்கு மேற்பட் டோரை கண்காணிக்க தனி பிரிவு அமைக்கப்பட்டுள்ளது. அதேபோல், ஏற்கனவே ஆஸ் துமா, இருதய நோய் போன்ற நோய்க ளினால் பாதிக்கப்பட்டவர்களும் இந்த தனி கண்காணிப்பு மையத்திற்கு சுகா தாரத் துறையால் அழைத்துச் செல்லப் படுவர். கருமத்தம்பட்டி பகுதியில் உள்ள தேஜா சக்தி மகளிர் பொறியி யல் கல்லூரி விடுதி, தற்போது சிறப்பு கண்காணிப்பு மையமாக மாற்றப்பட் டுள்ளது. இதில் 100 படுக்கை வசதிக ளுடன் இம்மையம் அமைக்கப்பட் டுள்ளது. விமானம் மூலம் வரும் பய ணிகள் 14 நாட்கள் தங்க வைத்து கண் காணிக்கப்படுவார்கள். இதில், கொரோனோ அறிகுறி தென்பட் டால் இஎஸ்ஐ மற்றும் அரசு மருத்து வமனைக்கு மாற்றி சிகிச்சை அளிக் கப்படுமெனவும் மாவட்ட சுகாதாரத் துறையினர் தெரிவித்தனர்.
கொரோனா பாதிப்பு
கோவை விமான நிலையத்தில் நடைபெற்ற சோதனையின்போது தாய்லாந்து நாட்டை சேர்ந்த நபருக்கு கொரோனோ அறிகுறி இருப்பது தெரி யவந்தது. தாய்லாந்து நாட்டைச் சேர்ந்த ஏழு பேர் தமிழகத்தை சுற்றிப் பார்க்க கடந்த வாரம் சென்னைக்கு வந்தனர். இதன்தொடர்ச்சியாக ஈரோடு சென்றுவிட்டு கோவை வந்த இந்த ஏழு பேரில் ஒருவரான நாற்பது வயது மதிக்கத்தக்கவருக்கு காய்ச்சலு டன் சளி, இருமல் பாதிப்புகள் ஏற்பட் டது. இதைத்தொடர்ந்து உடனிருந் தவர்கள் அவரை மீண்டும் தாய்லாந் துக்கு அனுப்ப கோவை விமான நிலை யம் அழைத்து வந்தனர். அப்போது, விமான நிலையத்தில் நடைபெற்ற சிறப்பு பரிசோதனையின் போது அவ ருக்கு கொரோனோ வைரஸ் அறிகுறி இருப்பது தெரியவந்தது. இதனைய டுத்து தாய்லாந்து நாட்டைச் சேர்ந்த நபரை உடனடியாக கோவை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு இவருக்கு ரத்தம் மற்றும் சளி மாதிரிகள் எடுக்கப்பட்டு ஆய்வுக்கு அனுப்பப்பட்டது. இந்த ஆய்வின் முடிவு திங்க ளன்று வெளிவந்தது. இதில் அவருக்கு கொரோனோ நெகட்டிவ் என தெரிய வந்தது. இருப்பினும் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்ட அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலை யில், தாய்லாந்து நாட்டை சேர்ந்த சுற் றுலா பயணியின் சிறுநீரகம் பாதிக்கப் பட்டதால் சிகிச்சை பலனின்றி பரிதாப மாக செவ்வாயன்று உயிரிழந்தார். இதையடுத்து, இவரது மரணம் குறித்து தாய்லாந்து நாட்டின் தூதரகத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.