tamilnadu

img

பழைய பாலம் இங்கே - புதிய பாலத்திற்கு ஒதுக்கிய நிதி எங்கே? முதல்வருக்கு தபால் அனுப்பும் போராட்டம்

கோவை, ஆக. 31 –  வெள்ளலூர் பழைய பாலத்தை இடித்து புதிய பாலம் கட்ட நிதி ஒதுக் கீடு செய்துள்ளதாக அமைச்சருக்கு நன்றி தெரிவித்து ஊர் முழுவதும் போஸ்டர் ஒட்டி விளம்பரப்படுத்தி இரண்டு ஆண்டுகள் ஆன பின்னும், புதிய பாலத்திற்கான ஆரம்ப கட்ட வேலைக்கூட துவக்காமல் இருப்பதை சுட்டிக்காட்டி வெள்ளலூர் பொதுமக் கள் முதல்வருக்கு தபால் அனுப்பும் போராட்டத்தில் திங்களன்று ஈடு பட்டனர். கோவை மாவட்டம், சிங்காநல் லூர் - வெள்ளலூர் சாலையை இணைக்கும் பகுதியில் ஆற்றுப்பாலம் உள்ளது. இந்த பாலம் வழியாக நாள் தோறும் ஆயிரக்கணக்கான வாகனங் கள் சென்று வருகிறது.

காமராஜர் முதல்வராக இருந்த போது கட்டப் பட்ட இந்த பாலம் தற்போது மிகவும் பழுதடைந்துள்ளது. இதனையடுத்து வெள்ளலூரில் பொதுமக்கள் மற்றும் மார்க்சிஸ்ட் கட்சி உள்ளிட்ட அனைத்து அரசியல் கட்சிகளும் இந்த பாலத்தை இடித்துவிட்டு புதிய பாலம் கட்ட வேண்டும் என தொடர்ந்து கோரிக்கை வைத்து போராடினர். இத னையடுத்து கடந்த வருடம் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உள்ளிட்டோர் பாலத்தை ஆய்வு செய்துள்ளனர். இத னையடுத்து 2019 ஆண்டு புதிய பாலம் கட்ட ரூ. 3 கோடியே 69 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டதாக அறிவிக் கப்பட்டது.  இதனை வரவேற்று  அதிமுகவினர் அமைச்சருக்கு நன்றி தெரிவித்து ஊர் முழுவதும் போஸ்டர் ஒட்டினர். ஆனால் இரண்டு ஆண்டுகள் ஆன  பிறகும் பாலத்தின் ஆரம்ப கட்ட பணியைக்கூட துவக்கவில்லை. பாலம் தற்போது மேலும் பலவீனம டைந்துள்ள நிலையில் வாகன ஓட்டி கள் நாள்தோறும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.  இந்நிலையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் பாலத்தின் கட்டுமானம் துவக்குவதற்கு கால தாமதமாவது குறித்து விசாரிக்கை யில் சம்பந்தப்பட்ட கோப்புகள் குறித்த விபரங்கள் அதிகாரிகளுக்கே தெரி யாத நிலை உள்ளது. மேலும் அழுத் தம் கொடுத்து கேட்டபோது முதல்வ ரின் மேஜையில் உள்ளது என அதிகாரி கள் நழுவியுள்ளனர்.

இதனையடுத்து வெள்ளலூர் ஆற்றுபால வேலையை உடனே துவக்க வலியுறுத்தி வெள்ள லூர் பகுதியில் உள்ள நூற்றுக்கணக் கான பொதுமக்களிடம் தனித்தனியே கடிதம் பெற்று முதல்வருக்கு தபால் அனுப்பும் போராட்டத்தில் மார்க் சிஸ்ட் கட்சியினர் ஈடுபட்டனர். இதன் முதற்கட்டமாக கோவை ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ள தபால் நிலையில் பொதுமக்கள் 200 பேரின் கடிதங்களை அனுப்பும் போராட்டத் தில் ஈடுபட்டனர். இதில் மார்க்சிஸ்ட் கட்சியின் மதுக்கரை ஒன்றிய செயலாளர் ரவிச் சந்திரன், அகில இந்திய விவசாயிகள் சங்கத்தின் மாவட்ட தலைவர் வி.பி.இளங்கோவன், சிபிஎம் மதுக்கரை ஒன்றியக்குழு உறுப்பினர் சிவானந் தம் மற்றும் தர்மலிங்கம், செல்வராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

;