tamilnadu

img

மனிதனை விலங்குகளிடமிருந்து பிரிப்பது புத்தகமே

தருமபுரி, ஆக.2- மனிதனை விலங்குகளிடமி ருந்து பிரிப்பது புத்தகமே என தரு மபுரி புத்தகத் திருவிழாவில் கவிஞர்  மதுக்கூர் இராமலிங்கம் பேசினார். தருமபுரியில் நடைபெற்று வரும்  புத்தகத் திருவிழாவில் அறிவுசார் கருத்தரங்கம் வியாழனன்று நடை பெற்றது. இந்த கருத்தரங்கிற்கு மருதம் நெல்லி கல்வி நிறுவனங்கள் தலைவர் கே.கோவிந் தலைமை  வகித்தார்.ஆசிரியர் மா.பூங் குன்றன் வரவேற்றார். இக்கருத்த ரங்கில் “அன்பென்று கொட்டு முரசே” எனும் தலைப்பில் தீக்கதிர் ஆசிரியரும், கவிஞருமான மதுக்கூர் இராமலிங்கம் பேசியதாவது, மனி தனை விலங்குகளிடமிருந்து பிரித்து  காட்டுவது புத்தகம் மட்டுமே யாகும். மனிதனை அறிவார்ந்த வனாக புத்தகம் மாற்றுகிறது. எனவே, அத்தகைய அறிவாயுத மான புத்தகங்களை தேடிப்பிடித்து படிக்க வேண்டும். இந்த புத்தகத் திருவிழாவில் கலை, அறிவியல், இலக்கியம், ஆன்மிகம் என அனைத்து தரப்பு புத்தகங்களும் காணக் கிடக்கின்றன. அவரவருக்கு பிடித்தமான புத்தகங்களை வாங்கி பயில வேண்டும்.  மேலும், குழந்தைகளை புத்தக  திருவிழாவுக்கு  அழைத்து வர வேண்டும். குழந்தைகளுக்கு புத்த கங்கள் குறித்து கற்றுத் தர வேண்டும். அவர்களை புத்தகங்கள் படிக்க பழக்க வேண்டும்.  மும்பையில் தலித்துகளுக்கு  கல்வி மறுக்கப்பட்டபோது, ஜோதி ராவ் புலேயின் மனைவி சாவுத்திரி பாய் புலே குழந்தைகளுக்கு கல்வி  கற்றுக்கொடுத்த முதல் கல்விச் சாலையாகும். ஒவ்வொரு குழந்தை களின் கனவு என்னவென்று  தெரிந்து கொள்ளுங்கள். குழந் தைகள் மீது உங்கள் கனவை திணிக்காதீர்கள்.  முந்தையக் காலத்தில் கல்வி  எல்லோருக்கும் கொடுக்கப்பட வில்லை. குறிப்பிட்டவர்களுக்கு மட்டுமே அது கொடுக்கப்பட்டது. ஆனால், இன்றைய காலக் கட்டத்தில் அனைவருக்கும் கல்வி  அளிக்கப்படுகிறது. இதனை பயன்படுத்தி அனைவரும் பயில  வேண்டும். அவ்வாறு நாம் பயின்றதைக் கொண்டு நமது  வாழ்க்கையை அர்த்தமுள்ள தாக்கிட வேண்டும். மகிழ்வுடன் வாழ்ந்து மனித நேயத்தோடு அனைவரிடத்தில் அன்பு செலுத்த வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.   இதைத்தொடர்ந்து கவிஞர் நாகை பாலு,  மாவட்ட வருவாய் அலுவலர் அழகிரிசாமி, ஊரக வளர்ச்சித் திட்ட இயக்குநர் எம்.காளிதாசன், செல்வ கணபதி ஹார்டுவேர்ஸ் உரிமையாளர் என்.ராமச்சந்திரன், ஸ்டான்லி வி. முருகேசன் உள்ளிட்டோர் பேசினர்.  முன்னதாக, குறள் நெறிப் பேரவை  சார்பில் “வாழ்க்கைக்கு உறுதுணை யாவது’ - அருமைச் சுற்றமா?, ஆழ்ந்த நட்பா?, அனுபவ முது மையா? எனும் தலைப்பில் நடுவர் இரா.அரிதாசு தலைமையில் பட்டி மன்றம் நடைபெற்றது.  இதனைத் தொடர்ந்து, “தாள் பணியா தாள்’ என்ற தலைப்பில் கவியரங்கம் கவிஞர் கீரை பிரபாகரன் தலைமை யில் நடைபெற்றது. இதில், புத்தகத்  தாள் என தகடூர் ப.அறிவொளி, பத்திரிகைத் தாள் என வ.செளந்தர பாண்டியன், வாக்குத் தாள் என க.சி.தமிழ்தாசன்,  பணத்தாள் என கவிஞர் வெ.சஞ்சீவராயன், கடிதத் தாள் என கவிஞர் சந்தோஷ்குமார், தேர்வுத் தாள் என கவிஞர் ராஜ குமாரன் ஆகியோர் பேசினர். இந் நிகழ்வுகளில் திரளான புத்தக ஆர்வ லர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.