தருமபுரி, ஆக. 5- பண்டைய தமிழ் மரபே பொதுவுட மைதான் என தருமபுரி புத்தகத் திரு விழாவில் திருப்பூர் நாடாளுமன்ற உறுப்பினர் கே.சுப்பராயன் பேசி னார். தகடூர் புத்தக பேரவை மற்றும் பாரதிபுத்தகாலயம் இணைந்து தரும புரியில் இரண்டாவது புத்தகதிருவிழா ஜூலை 26 ஆம் தேதி முதல் ஆக.4 ஆம் தேதி வரை தருமபுரி மதுராபாய் சுந்தராவ் திருமண மண்டபத்தில் நடை பெற்றது. இறுதிநாளான ஆக.4 ஆம் தேதியன்று “தமிழ் மரபணுவை செதுக்கியவர்கள்’’ என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது. இந் நிகழ்ச்சிக்கு ஸ்ரீ விஜய் வித்யாலயா கல்வி நிறுவனங்களின் நிறுவனர் டி. என்.சி.மணிவண்ணன் தலைமை வகித்தார். ஆசிரியர் மா.பழனி வர வேற்றார். திருவள்ளுவர் குறித்து அருட்தந்தை ஜெகத்கஸ்பர் பேசி னார். நியூஸ்-18 முதன்மை ஆசிரியர் மு.குணசேகரன், பேராசிரியர்கள் சி.சீனிவாசன், கு.சிவப்பிரகாசம், ஆசி ரியர் ப.இளங்கோ, அறிவியல் இயக்க நிர்வாகி சுசில்குமார் உள்ளிட்டோர் வாழ்த்தி பேசினர். இதில் சுதந்திர போராட்ட வீர ரும், பொதுவுடைமை தலைவருமான ஜீவா குறித்து திருப்பூர் நாடாளுமன்ற உறுப்பினர் கே.சுப்பராயன் பேசிய தாவது, இராமாயணம், மகாபாரதம் போன்ற இதிகாசங்கள் புராணங்கள் கற்பனையானவையே என்று பாரதி சொன்னார். திராவிடம், தேசிய விடு தலை இயக்கம், கம்யூனிஸ்ட் இயக் கத்தில் பயணித்தவர் ஜீவா, இவருக்கு சொந்தமாக வீடு, நிலம் எதுவுமே இல்லை. வங்கி கணக்கு இல்லை, ஏழைகளோடு புறம்போக்கு இடத் தில் வாழ்ந்தவர். மக்கள் செல்வாக்கு பெற்ற இவர் 1957 ஆம் ஆண்டு வண் ணாரப்பேட்டை தொகுதியில் சட்ட மன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக் கப்பட்டார். மேலும், பண்டைய தமிழ் மரபே பொதுவுடமைதான். பெரியாரும், சிங்காரவேலரும் இந்த மண்ணில் வர்ணா சிரமத்தை எதிர்த்து போராடி யவர்கள். பண்முக கலாச்சாரம் கொண்ட இந்திய மண்ணில் வேற்று மையில் ஒற்றுமை காண வேண்டுமே தவிர ஒற்றுமையில் வேற்றுமை காண கூடாது. இவ்வாறு அவர் பேசினார். இதைத்தொடர்ந்து காமராசர் குறித்து எஸ்.பீட்டர் அல்போன்ஸ் பேசியதாவது, பொதுவாழ்வு புத்தன் என்று பெரியாரால் போற்றப்பட்ட வர் காமராசர். தமிழகத்தில் ராஜ கோபால ஆச்சாரியர் முதல்வராக இருந்தபோது ஒரு மாநாட்டில் குலக் கல்வி முறை கொண்டு வரவேண்டும் என்று பேசினார். ஆனால், அதே கட்சி யில் இருந்த காமராசர் குலக்கல் வியை எதிர்ப்பேன் என போராடினார். தமிழகத்தில் இரட்டை குவளமுறை, இரு கிணறு, இரு சுடுகாடு என சாதி ஆதிக்கம் இருந்தது. சாதியை ஒழிக்க வேண்டும் என்றால் முதலில் கல்வியை கொடுக்க வேண்டும் என சொல்லி 2 ஆயிரம் பள்ளிகளை காமராசர் திறந் தார். அன்றைய காலகட்டத்தில் தாழ்த் தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த பரமேஸ் வரனை கோயிலுக்குள் விட வில்லை. இதனை அறிந்த காமராசர் பாரமேஸ்வரனை அறநிலையத் துறைக்கு அமைச்சராக்கி பரமேஸ் வரனுக்கு பரிவட்டம் கட்டி அழகு பார்த்தார்.
தாழ்த்தப்பட்டவர் என்றால் அமைச்சரவையில் ஆதிதிராவிடர் நலத்துறையை ஒதுக்குவார்கள். ஆனால் அப்போதே கக்கனுக்கு உள்துறை அமைச்சராக்கினார். மேலும், காமராசர் நாடாளுமன்றத் தில் மதவாதத்திற்கு எதிராக பசுவதை எதிர்ப்பு சட்டத்தை எதிர்த்தார். இதனால் ஆத்திரம் கொண்ட மதவாதி கள் அவரை எரிக்க முயன்றனர். ஆனால் அவரது நிலைப்பாட்டில் இருந்து பின்வாங்கவில்லை. காம ராசருக்கு ஆதரவாக பெரியார் குரல் கொடுத்து பாதுகாத்தார். தமிழகத் தில் அணைகள், பாலம், நெய்வேலி சுரங்கம் என அனைத்தும் கொண்டு வந்தது காமராசர் என அவர் குறிப் பிட்டார். இதேபோல், வள்ளலார் குறித்து பெருமாள்மணி பேசுகையில், சீர் திருத்த கருத்துகளை முதன்முதலில் உருவாக்கியவர் வள்ளலார். திருக் குறள் வகுப்பாக நடத்தியவர். சாதியை ஒழிக்கவேண்டும் என்று துறவியாக இருந்து சீர்திருத்த கருத்துகளை சொன்னவர் வள்ளலார், காவிக்கும் பலை எதிர்த்தவர் என அவர் பேசி னார்.
அண்ணா குறித்து கவிஞர் மருது.அழகுராஜ் பேசுகையில், அறிஞர் அண்ணா அரை நூற்றாண்டு காலம் தந்தை பெரியாரின் திராவிடக் கொள் கையை தமிழக கிராமத்தில் உள்ள பட்டிதொட்டிக்கெல்லாம் கொண்டு சேர்த்தவர். பெண்ணடிமை, மூடப் பழக்கவழக்கத்தை தொடர்ந்து எதிர்த்து வந்தவர். சுயமரியாதை திருமணத்தை நடத்தினார். பேச்சா ளர், எழுத்தாளர் என பண்முக தன்மை கொண்டவர் அறிஞர் அண்ணா என குறிப்பிட்டார். தந்தை பெரியார் குறித்து வே.மதி மாறன் பேசியதாவது, இரண்டாயிரம் ஆண்டுகால பண்பாட்டு ரீதியான அடிமைத்தனத்தை தலைகீழாக புரட்டிப்போட்டு தமிழனை தலை நிமிரவைத்தவர் தந்தை பெரியார். கல்வி மறுக்கப்பட்ட சமூகம் தமிழ் சமூகம். நம் மொழியை படிக்கமுடியாத நிலமை, இட ஒதுக்கீடு கிடைத்த பிறகுதான் கல்விகற்க வேண்டிய சூழல் இருந்தது.1925 ஆம் ஆண்டு மொழியை ஜனநாயகப்படுத்தியவர் பெரியார். இலக்கியம் படிப்பதற்கு உயர் சாதிக்காரராக இருந்தால் மட்டுமே படிக்கமுடியும். தாழ்த்தப் பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்கள் படிக்க
பரிசளிப்பு விழா
முன்னதாக, புத்தகத் திரு விழாவையொட்டி பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு பேச்சு, கட்டுரை, கவிதை உள்ளிட்ட போட்டிகள் நடத் தப்பட்டன. இதில், வெற்றி பெற்ற மாணவ, மாணவியருக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட் டன. மேலும், இவ்விழாவில், சித்தேரி அரசு மேல்நிலைப் பள்ளி, ஏரிமலை அரசுப் பள்ளி, சின்னப்பள்ளத்தூர் அரசுப் பள்ளி மற்றும் சந்தப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளிகளுக்கு தக டூர் புத்தகப் பேரவை சார்பில் தலா ரூ.5 ஆயிரம் மதிப்பிலான புத்தகங்கள் வழங்கப்பட்டன. முடிவில் அறிவுடை நம்பி நன்றி கூறினார்.