கோவை, ஆக.27– தமிழகத்தில் அருந்ததிய மக்க ளுக்கு மூன்று சதவீதம் உள்ஒதுக் கீடு அளித்தது செல்லும் என்கிற உச்சநீதிமன்றத் தீர்ப்பையடுத்து தீண்டாமை ஒழிப்பு முன்னணி உள் ளிட்ட பல்வேறு அமைப்புகள் உற் சாகமாக பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி தீர்ப்பை வர வேற்று முழக்கங்களை எழுப்பி னர். அடுக்கி வைக்கப்பட்ட மூட்டை களில் அடி மூட்டையாக சமூகத்தில் பின்தங்கி இருக்கும் அருந்ததிய மக்களுக்கு உள்ஒதுக்கீடு வழங் கிடக்கோரி கடந்த பத்தாண்டுக ளுக்கு முன்னர் பல்வேறு தரப் பிலிருந்து தொடர்ந்து குரல்கள் எழுப்பப்பட்டு வந்தது. குறிப்பாக, இக்கோரிக்கையை முன்வைத்து மார்க்சிஸ்ட் கட்சியின் அன்றைய மாநிலச் செயலாளரான மறைந்த தோழர் என்.வரதராஜன் தலை மையில் சென்னையில் பல்லாயி ரக்கணக்கானோர் பங்கேற்ற மாபெரும் பேரணி நடைபெற்றது. இதனையடுத்து தமிழக முதல்வராக இருந்த மு.கருணாநிதி இக்கோரிக்கையின் நியாயம் உணர்ந்து உள்ஒதுக்கிட்டை சட்ட மாக்கினார். இதன்படி பட்டியல் இனத்தவருக்கான 18 சதவிகித இட ஒதுக்கீட்டில், அருந்ததிய மக்க ளுக்கு 3 சதவிகித உள்ஒதுக்கீடு வழங்கும் சட்டம் 2009 ஆம் ஆண்டு தமிழக சட்டப்பேரவையில் நிறை வேற்றப்பட்டது. ஆனால், இதனை எதிர்த்து சென்னை உயர்நீதிமன் றத்திலும், பின்னர் உச்சநீதிமன் றத்திலும் வழக்கு தொடுக்கப்பட் டது. இந்நிலையில், அருந்ததிய மக் களுக்கு அளிக்கப்பட்ட உள்ஒதுக் கீடு சட்டம் செல்லும் எனவும் மேலும் மாநிலங்களுக்கே இதற்கான அதி காரம் என்றும் வியாழனன்று உச்ச நீதிமன்றம் வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பை வழங்கியுள்ளது. இதனை வரவேற்று கோவையில் மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன் னணி, ஆதித்தமிழர் பேரவை, திராவிடத் தமிழர் கட்சி, சமூக நீதிக்கட்சி, தமிழ்ப்புலிகள் அமைப் பினர் பொதுமக்களுக்கு இனிப்பு களை வழங்கி உற்சாக முழக்கங் களை எழுப்பினர். கோவை காமராஜபுரத்தில் நடைபெற்ற நிகழ்வில் தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநில துணைப் பொதுச்செயலாளர் யு.கே. சிவஞானம், மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் ஆறுச்சாமி, மாவட்ட துணைத் தலைவர் நா.மயில்சாமி, சிபிஎம் முன்னாள் மாமன்ற உறுப் பினர் என்.முருகேசன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.