tamilnadu

img

குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு எதிரான பேரணி கோவையில் பல்லாயிரக்கணக்கானோர் திரண்டனர்

கோவை, பிப். 2– குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை  திரும்பப் பெறக்கோரி கோவையில் இஸ்லாமிய அமைப்புகள், அரசியல் கட்சியினர் பங்கேற்ற பேரணியில் பல்லாயிரக்கணக்கானோர் திரண் டனர். குடியுரிமைத் திருத்தச் சட் டத்தை திரும்பப் பெறக்கோரி, கோவை அனைத்து ஜமாஅத் மற் றும் இஸ்லாமிய அமைப்புகள், அர சியல் கட்சிகள் சார்பாக தேசம் காக்கும் ஒற்றுமைப் பேரணி ஞாயி றன்று நடைபெற்றது. உக்கடம் பகுதியில் இருஅந்து செஞ்சிலுவை சங்கம் வரை நடைபெற்ற பேரணி யில், பல்வேறு அமைப்புகளை சேர்ந்த 10 ஆயிரத்திற்கும் மேற்பட் டோர் தேசிய கொடிகளுடன் பங்கேற்றனர். முன்னதாக பேரணியின் முகப் பில் சிபிஎம் அரசியல் தலைமை குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன், திமுக சட்டமன்ற உறுப்பினர் நா.கார்த்திக், தபெதிக பொதுச்செய லாளர் கு.ராமகிருட்டிணன், காங்கி ரஸ் மாநில செயல் தலைவர் மயூரா  ஜெயக்குமார், சிபிஎம் மாநிலக்குழு உறுப்பினர் சி.பத்மநாபன் உள்ளிட் டோர் பங்கேற்றனர். மக்கள் விரோத குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை கொண்டு வந்த மத்திய பாஜக அரசைக் கண்டித்தும், இச்சட்டம் நிறைவேற காரணமாக இருந்த மாநில அதிமுக அரசை கண் டித்தும் தலைவர்கள் முழக்கங்களை எழுப்பியபடி பேரணியாகச் சென்ற னர். உக்கடம் பகுதியில் இருந்து வாலாங்குளம், அரசு கலைக்கல் லூரி வழியாக 3 கிலோ மீட்டர் தூரத்திற்கு மிக நீளமான தேசிய கொடியை கையில் ஏந்தியும், மதத் தின் பெயரால் மக்களை பிரிக்கும் சட்டத்திற்கு எதிரான வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியும் இந்த பேரணி நடைபெற்றது.  இதில் சிஏஏ, என்.ஆர்.சி, என்.பி.ஆர்  ஆகிய சட்டங்களை திரும்பப் பெற வேண்டும். மக்கள் தொகை கணக் கெடுப்பை மாநில அரசு மேற்கொள் ளக்கூடாது. சட்டமன்றத்தில் குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று முழக்கங்கள் எழுப்பப்பட்டன. நிறைவாக செஞ் சிலுவை சங்கம் முன்பு முடிவுற்ற பேரணியில் தலைவர்கள் கண்டன உரையாற்றினர். முன்னதாக இப் பேரணியில் 3 ஆயிரத்துக்கும் மேற் பட்ட காவல் துறையினர், அதி விரைவு படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

;