tamilnadu

img

டேங்கர் லாரிகள் தீர்வல்ல... மாண்புமிகு அரசே!

எனக்கு இரண்டு பக்கெட் தண்ணீர் போது மானது என்று முதல்வர் விளக்கம் அளிக்கும் அளவுக்கு தண்ணீர் தட்டுப்பாடு நிலவுகிறது. ஏழை, எளிய மக்கள் இன்றைக்கு வேலைக்குச் செல்வதற்கான நேரத்தைக் குறைத்துக் கொண்டு, தண்ணீர் எடுக்கக் காத்துக்கிடக்கி றார்கள். இப்போதைய தண்ணீர் பஞ்ச நிலையி லிருந்து சென்னை எப்படி மீண்டெழும் என்று ஊடகங்கள் கேள்வி எழுப்புகின்றன. சென்னை மட்டுமல்ல; காவிரி நதி பாயும் டெல்டா மாவட் டங்களான தஞ்சை, திருவாரூர், நாகையின் நிலை யும் இதுதான். தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளிலும் இதுதான்  நிலைமை. எனவே மீண்டும் மீண்டும் நீர் மேலாண்மை பற்றிய பேச்சு எழுந்த வண்ணம் இருக்கிறது. ஆனால் அரசு அதற்கு காது கொடுக்கத் தயாராக இல்லை. நீர்மேலாண்மை என்கிறபோது நீராதாரங்க ளை உருவாக்குவது, அவற்றைப் பாதுகாப்பது, நீரைச் சேமிப்பது, உபயோகமான முறையில் பயன்படுத்துவது குறித்துத் திட்டமிடுவது, நீரை விநியோகம் செய்வது, நீர் விரயத்தைக் குறைப்பது ஆகிய கொள்கைகளைக் கொண்ட தாகும். இதில் பண்டைத் தமிழர்கள் முன்னோடி கள் என்பதை இங்கே குறிப்பிடவேண்டும்.

முதல்படி

நீர் மேலாண்மையின் முதல்படியே நீர் ஆதா ரங்களை உருவாக்குவதுதான். கடந்த 8 ஆண்டு களில் குடிதண்ணீருக்காக கிட்டத்தட்ட 38 ஆயிரம் கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளதாக நீரியல் வல்லுநர்கள் சொல்கிறார்கள். இவ்வளவு கோடிகள் செலவு செய்த பின்னரும் குடிப்பதற்கு தண்ணீர் இல்லை. அதற்குக்காரணம் நீராதா ரங்களை உருவாக்குவது தொடர்பான நிலை யான திட்டங்கள் நம்மிடம் இல்லை. அல்லது அவற்றிற்கு நாம் முன்னுரிமை கொடுப்ப தில்லை. உதாரணத்துக்கு 6 ஆண்டுகளுக்கு முன்பு, சென்னை குடிநீர் தேவையினை கருத்தில் கொண்டு திருவள்ளூர் மாவட்டத்தில் தேர்வாய்கண்டிகை நீர்த்தேக்கம் ரூ.400 கோடி செலவில் அமைக் கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டு அதில் 1 டிஎம்சி தண்ணீர் தேக்கலாம் என்றும் கூறப்பட்டது. அதன் நிலை என்ன என்று இப்போது தெரிய வில்லை. இத்திட்டத்துக்கு 2013-ம் ஆண்டு அப் போதைய முதல்வர் ஜெயலலிதாவால் அடிக்கல் நாட்டப்பட்டதாகவும் தகவல் உண்டு. மேலும் ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் செலவு செய்து கொண்டு வந்த தெலுங்கு கங்கை திட்டத்தின் மூலம் ஆண்டிற்கு 12.டி.எம்.சி தண்ணீர் கிடைக்க வேண்டும் என்பது ஒப்பந்தம். ஆனால் எந்த ஆண்டிலும் இரண்டு டிஎம்சிக்கு மேல் நமக்கு வந்ததில்லை என்கிறார்கள். அதே போல் கடந்த ஆண்டு குடிநீர் தேவைக்காக ரூ.340 கோடி சிறப்பு நிதி ஒதுக்கியுள்ளதாக முதல மைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். அந்தத் தொகை யார் பாக்கெட்டிற்கு சென்றது என்பது இப்போது வரை தெரியவில்லை.

நாம் எடுத்துக்கொள்ளும் அளவு

உலகில் அதிக அளவு நிலத்தடி நீரை பயன் படுத்துவதில், அதிக மக்கள் தொகை கொண்ட சீனாவை விட இந்தியாதான் முன்னிலை யில் இருக்கிறது. குறிப்பாக நகர்ப்புறங்களில் தேவையான தண்ணீரில் 50 சதவீதத்தையும் கிராமப்புறங்களில் 85 சதவீதத்தையும் நாம் நிலத்தடி நீரால் பூர்த்தி செய்து கொள்கிறோம். நிலத்தடி நீரில் 89 சதவீதம் பாசனத்திற்கும் 9 சத வீதம் வீட்டுத் தேவைகளுக்கும் பயன்படுத்தப்படு கிறது. ஆண்டொன்றுக்கு 230 கன கி.மீ அளவு நிலத்தடி தண்ணீரை நாம் பயன்படுத்துகிறோம். இது ஒட்டுமொத்த உலகமும் பயன்படுத்தும் தண்ணீரில் 25 சதவீதம் ஆகும். இந்தளவுக்கு நிலத்தடி நீரை பயன்படுத்து வதால் 2007-லிருந்து 2017 வரை 10-ஆண்டுகளில் நம்முடைய நிலத்தடி நீரில் 61 சதவீதத்தை காலி செய்திருக்கிறோம். ஒரு மனிதனுக்கு உணவு, குடிநீர், சுகாதாரம் என எல்லாத்தேவைக்கும் ஒரு நாளைக்கு 25 லிட்டர் தண்ணீர் போதுமானது என்று உலக சுகாதார நிறுவனத்தின் புள்ளிவிவரம் கூறுகிறது. ஆனால் நம் நாட்டில் கிராமங்களில் ஒரு நாளைக்கு ஒரு நபர் 40 லிட்டர் வரையும் சென்னை, பெங்களூரு, தில்லி போன்ற நகரங்க ளில் ஒரு நாளைக்கு 150 லிட்டர் வரையும் தனநபர் பயன்பாடு இருக்கிறது. உலகில் அதிகளவு தண்ணீரை பயன்படுத்துவது நாம்தான் என்கிறது அந்த புள்ளிவிவரம்.

வீணாகும் தண்ணீர்

இன்னொரு புள்ளிவிவரம், நாம் தண்ணீரை வீணாக்குவதை அம்பலப்படுத்துகிறது. இந்தியா வின் ஒரு ஆண்டுக்கான ஒட்டுமொத்த தண்ணீர் தேவை 3 ஆயிரம் பில்லியன் க.மீ ஆகும். நமக்கு மழையின் மூலம் கிடைப்பதோ 4 ஆயிரம் பில்லி யன் க.மீ ஆகும். 1000 பில்லியன் க.மீ அளவுக்கு கூடுதலாக கிடைத்தாலும் நமக்கு கிடைக்கும் மழையில் 8 சதவீதத்தை மட்டுமே நாம் சேமிக்கி றோம். மீதியை வீணாக கடலில் கலக்கச் செய்கி றோம் என்கிறது அந்த ஆய்வு. ஆக தண்ணீர் சேமிப்பில் மெத்தனம், உலக சராசரியை விட அதிக தண்ணீர் பயன்பாடு, அதிக ளவில் நிலத்தடி நீர் சுரண்டல் என நீர் பயன் பாட்டில் நமக்கு முறையான நிர்வாகத்திறன் இல்லாததன் விளைவுதான் இன்றைய தண்ணீர் பற்றாக்குறை என்கிறார்கள் வல்லுனர்கள்.   
 

4 ஆயிரம் ஏரிகளைப் பராமரித்தாலே...

இந்த வறட்சியும் நீர் தட்டுப்பாடும் நமக்கு நாமே உருவாக்கிக் கொண்டது என்றால் மிகை யில்லை. மழை பெய்த காலத்தில் நீரைத் தேக்கி வைக்க நாம் நீர்நிலைகளைத் தயார்நிலையில் வைத்திருக்கிறோமா? தமிழகத்தில் 30 ஆயிரத்து 202 நீர் நிலைகள் உள்ளதாக அரசுக்கணக்கு உள்ளது. இதில் எத்தனை நீர்நிலைகளைப் பாது காத்து பராமரிப்பில் வைத்திருக்கிறது அரசு? தண்ணீரினை சேமிக்க ஏதுவான மிக அருமை யான பூகோள அமைப்பு உடையது சென்னை மாநகரம், சென்னையினைச் சுற்றி இருக்கின்ற திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் கிட்டத்தட்ட 3 ஆயிரத்து 600 ஏரிகள் இருக்கின் றன. இதில் அரக்கோணம் தாலுக்காவினையும் சேர்த்துக் கொண்டால் மொத்தம் 4 ஆயிரத்து 100 ஏரிகள் உள்ளன. அந்த 4 ஆயிரத்து 100 ஏரிகளை முறையாக பராமரித்தால் மழை பெய்யும் பொழுது 170 டிஎம்சி நீரினை சேமித்து வைக்க இயலும். அப்படி ஏரிகளில் சேமித்தால் மூன்றாண்டு மழை பெய்யாவிட்டால் கூட நம்மால் சமாளித்து விட இயலும்; நிலத்தடி நீரும் அதிக ரிக்கும் என்கிறார் நீரியல் நிபுணர் ஜனகராஜ். பெய்கின்ற மழையில் 16 சதவீதமாவது நிலத்திற்குள் செல்ல வேண்டும். ஆனால் சென்னை போன்ற பெருநகரங்களில் 5 சதவீதம் கூட நிலத்திற்குள் செல்வதில்லை. அதற்கு கார ணம், முழுக்க முழுக்க கான்கீரிட் கட்டுமானம்.  சராசரி பருவ ஆண்டில் 100 டி.எம்சி என்ற அளவிலான மழைநீர் கடலில் கலக்கிறது என்பதை விஜயராகவன் தலைமையிலான குழு கணக்கிட்டு உள்ளது. தமிழகத்தில் இந்த மழை நீரை சேகரிக்க கண்மாய்களை அரசு தயாராக வைத்திருக்கவில்லை; புதிதாக கண்மாய்களை யும் உருவாக்கவில்லை.

டேங்கர் லாரிகள் தீர்வல்ல...

குடிநீர் பிரச்சனையைத் தவிர்க்க டேங்கர் லாரிகளின் எண்ணிக்கையை அதிகப்படுத்தியி ருப்பதாக அரசு சொல்கிறது. இது பிரச்சனைக்கா னத் தீர்வல்ல. இந்த தண்ணீருக்கு வழக்கத்தை விட நான்கு மடங்கு அதிகமாக செலவழிக்க வேண்டி வரும். முறையாக அறிவியல் தரவுகளின் அடிப்படையில் ஏரிகளை பராமரித்தாலே போதும். தண்ணீரினை மறுசூழற்சி செய்து மீண்டும் குடி நீராக மாற்றுவதற்கான தொழில் நுட்பங்களும் உள்ளன. அதை பயன்படுத்த முடியும். கடல் நீரை குடிநீராக்கும் திட்டத்திற்கு ஆகும் செலவை விட இதற்கானச் செலவுகள் குறைவுதான். நீர்நிலைகள் மற்றும் வரத்துக்கால் வாய்களிலுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்று தல், மழை நீர் சேகரிப்புத் திட்டத்தைத் தீவிரமாக அமல்படுத்துதல், ஆறுகளில் மிச்சமீதி இருக்கும் மணலும் கொள்ளை போகாமல் தடுத்தல் போன்றவற்றை கடுமையாக நடைமுறைப் படுத்த வேண்டியது ஆட்சியாளர்களின் கடமை என்பதை உணரவேண்டும்.குடிநீர் பிரச்சனையைத் தவிர்க்க டேங்கர் லாரிகளின் எண்ணிக்கையை அதிகப்படுத்தியி ருப்பதாக அரசு சொல்கிறது. இது பிரச்சனைக்கா னத் தீர்வல்ல. இந்த தண்ணீருக்கு வழக்கத்தை விட நான்கு மடங்கு அதிகமாக செலவழிக்க வேண்டி வரும். முறையாக அறிவியல் தரவுகளின் அடிப்படையில் ஏரிகளை பராமரித்தாலே போதும். தண்ணீரினை மறுசூழற்சி செய்து மீண்டும் குடி நீராக மாற்றுவதற்கான தொழில் நுட்பங்களும் உள்ளன. அதை பயன்படுத்த முடியும். கடல் நீரை குடிநீராக்கும் திட்டத்திற்கு ஆகும் செலவை விட இதற்கானச் செலவுகள் குறைவுதான். நீர்நிலைகள் மற்றும் வரத்துக்கால் வாய்களிலுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்று தல், மழை நீர் சேகரிப்புத் திட்டத்தைத் தீவிரமாக அமல்படுத்துதல், ஆறுகளில் மிச்சமீதி இருக்கும் மணலும் கொள்ளை போகாமல் தடுத்தல் போன்றவற்றை கடுமையாக நடைமுறைப் படுத்த வேண்டியது ஆட்சியாளர்களின் கடமை என்பதை உணரவேண்டும்.