கோவை, செப்.2- தோட்டக்கலைத் துறை சார் பில் தக்காளி பயிர்களில் கொடிக் கட்டுதலுக்கு ஹெக்டேருக்கு ரூ.25 ஆயிரம் மானியம் வழங் கப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கோவை மாவட்டத்தில் காய் கறிகள், பழவகை பயிர்கள், மர வகைப் பயிர்கள் என 20 ஆயி ரம் ஹெக்டேருக்கு மேல் தோட் டக்கலைப் பயிர்கள் சாகுபடி செய்யப்படுகின்றன. தோட்டக் கலைப் பயிர்கள் சாகுபடியை ஊக்குவிக்க ஆண்டுதோறும் தேசிய தோட்டக்கலை இயக்கம், ஒருங்கிணைந்த தோட்டக்கலை அபிவிருத்தி திட்டத்தின் கீழ் பல்வேறு மானியங்கள் வழங் கப்பட்டு வருகின்றன. இதன்படி நடப்பாண்டும் பல்வேறு மானி யத் திட்டங்கள் அறிவிக்கப்பட் டுள்ளன. இதில் தக்காளி பயிர் களில் கொடிக்கட்டுதலுக்கு ஹெக்டேருக்கு ரூ.25 ஆயிரம் மானியம் வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதி கபட்சமாக 12 ஹெக்டேருக்கு மானியம் வழங்க இலக்கு நிர் ணயிக்கப்பட்டுள்ளது. இத்திட் டத்தில் பயன் பெற விரும்பும் விவசாயிகள் வட்டார தோட் டக்கலைத் துறை அலுவலகங்க ளில் தங்களது பெயர்களை பதிவு செய்துகொள்ள அறிவுறுத்தப் பட்டுள்ளது. இதுகுறித்து தோட்டக்கலைத் துறை துணை இயக்குநர் ஜி.கே.உமாராணி கூறியதாவது, கோவை மாவட்டத்தில் மதுக் கரை, கிணத்துக்கடவு, சுல்தான் பேட்டை, தொண்டாமுத்தூர் வட்டாரங்களில் தக்காளி சாகுபடி அதிகளவில் நடைபெற்று வரு கின்றன. தக்காளி செடிகளில் காய்களின் எடையால் செடி கள் தரையில் சாய்ந்து வீணாக மல் இருக்க செடிகளில் கொடிக் கட்டுதல் முறை பின்பற்றப்படு கிறது. தக்காளி தோட்டங்களில் குறிப்பிட்ட இடைவெளியில் கம்புகள் நடவு செய்யப்படும். இக்கம்பங்கள் சணல் கயிறுகளால் இணைக்கப்படும். பின் தக்காளி செடியின் ஒவ்வொரு கிளைகளும் சணல் கயிறுகள் மூலம் இழுத்துக் கட்டப்படும். இதனால் காய் களின் பாரம் தாங்காமல் செடி கள் தரையில் சாய்வது தடுக் கப்படுகிறது. தக்காளிகளும் தர மாக அறுவடை செய்யப்படு கிறது. இந்நிலையில் தேசிய தோட் டக்கலை இயக்கம் சார்பில் தக் காளி செடிகளில் கொடிக்கட்டு தலுக்கு ஹெக்டேருக்கு ரூ.25 ஆயிரம் மானியம் அறிவிக்கப்பட் டுள்ளது. 12 ஹெக்டேருக்கு மானி யம் வழங்க இலக்கு நிர்ணயிக் கப்பட்டுள்ளது. இவை பின் னேற்பு மானியமாக விவசாயி களின் வங்கிக் கணக்குகளில் செலுத்தப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.