tamilnadu

img

பழங்குடியினருக்கு வழங்கிய மாடுகள் அடுத்தடுத்து உயிரிழப்பு

கோவை, பிப். 23 -  ஆனைகட்டி பழங்குடியின ருக்கு வழங்கிய 6 மாடுகள் அடுத்த டுத்து உயிரிழந்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கோவை மாவட்ட ஆதிதிராவிட மற்றும் பழங்குடியினர் நல வாரியம் சார்பில் கடந்த 10 ஆம் தேதி வீர பாண்டி, ஆனைகட்டி, தூமனூர், சேம்புகரை, தூவைப்பதி ஆகிய வன கிராமங்களில் வசிக்கும் 30 பழங்கு டியினருக்கு விலையில்லா கறவை மாடுகள் வழங்கப்பட்டன. இதில், ஒரு நபர் வீதம் ஒரு கறவை மாடு, ஒரு கன்றுக்குட்டி வழங்கப்பட்டது. தலா ரூ.34 ஆயிரத்து 400 மதிப்பில் மொத் தம் ரூ.10 லட்சத்து 32 ஆயிரம் மதிப் பிலான கறவை மாடுகள் வழங்கப் பட்டது.  இந்நிலையில், கடந்த சில தினங் களுக்கு முன்பு ஆனைகட்டி பகுதி யில் ஜோதிமணி என்பவருக்கு வழங் கப்பட்ட மாடு மற்றும் கன்றுக்குட்டி உயிரிழந்தது. இதைத்தொடர்ந்து அதே பகுதியில் பெருமாள், பனப் பள்ளியை சேர்ந்த குமார் ஆகியோ ருக்கு வழங்கப்பட்ட கன்றுக்குட் டிகள் உயிரிழந்தன. மேலும், கொண் டனூர் மலைக் கிராமத்தை சேர்ந்த தங்கவேல் என்பவருக்கு வழங்கப் பட்ட கன்றுக்குட்டி கடந்த 2 நாட்க ளுக்கு முன்பு உயிரிழந்தது. இந் நிலையில், ஞாயிறன்று அதிகாலை யில் தங்கவேலுக்கு வழங்கப்பட்ட கறவை மாடும் உயிரிழந்தது. இல வச கறவை மாடுகள் வழங்கிய 14 நாட்களுக்குள் 6 மாடுகள் அடுத்த டுத்து உயிரிழந்த சம்பவம் அப்பகு தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி யுள்ளது. இதனைத்தொடர்ந்து, அதிகாரிகள் வயதான மாடுகளை யும், நோய் வாய்ப்பட்ட மாடுகளை யும் வழங்கியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.  இது குறித்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின நலத்துறை அதிகாரி பிரபாகரன் கூறுகையில், பழங்குடியினருக்கு வழங்கப்பட்ட மாடுகள் அனைத்தும் உயர்தர மாடு கள். மொத்தம் 187 பேருக்கு மாடுகள் வழங்கப்பட்டுள்ளது. இதில், 6 மாடு கள் இறந்துள்ளது. காலநிலை மாற் றம், வளர்ப்பு முறை சரியில்லாமல் இருத்தல் உள்ளிட்டவை காரண மாக உயிரிழக்க வாய்ப்புகள் உள் ளது. மேலும், வழங்கப்பட்ட மாடு கள் அனைத்தும் கால்நடை பராம ரிப்புத்துறை அதிகாரிகளால் பரி சோதனை செய்யப்பட்டுள்ளது. நோய்வாய்ப்பட்ட, வயதான மாடு கள் வழங்கப்படவில்லை. உயிரி ழந்த மாடுகளுக்கு காப்பீட்டு தொகை வழங்கப்படும், என்றார்.