திருப்பூர், ஜூலை 18 – திருப்பூரில் நலவாரியத் தில் பதிவு செய்த தொழிலா ளர்களுக்கு அரசு அறிவித்த ரூ.2 ஆயிரம் நிவாரணத் தொகை கிடைக்கவில்லை என ஏஐ டியுசி சங்கத்தினர் தொழி லாளர் நலவாரிய அலுவல கத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட் டுள்ள நிலையில், நல வாரி யத்தில் பதிவு செய்த முறைசாரா தொழிலாளர் கள் மற்றும் கட்டுமான தொழிலாளர்களுக்கு தமி ழக அரசு ரூ.2 ஆயிரம் நிவா ரணத் தொகை அறிவித் திருந்தது. ஆனால், திருப்பூ ரில் நலவாரியத்தில் பதிவு செய்துள்ள 3ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர் களுக்கு இதுவரை நிவா ரணத்தொகை வழங்கப்பட வில்லை. இது தொடர்பாக, மாவட்ட ஆட்சியரிடம் பல முறை மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்க வில்லை. இதையடுத்து ஏஐ டியுசி சார்பில், திருப்பூர் மேட்டுப்பாளையம் பகுதி யில் உள்ள தொழிலாளர் நல வாரிய அலுவலகத்தை வெள்ளியன்று முற்றுகை யிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.