tamilnadu

உயர் மின்கோபுர வேலையை நிறுத்தி வைப்பு பி.ஆர்.நடராஜன் எம்.பி.,யிடம் டிஆர்ஓ., உறுதி

திருப்பூர், மே 23 - திருப்பூர் மாவட்டத்தில் விவ சாய விளைநிலங்களில் உயர் மின்கோபுரம் அமைப்பதற்கு உரிய இழப்பீடு வழங்குவது தொடர்பாக துணை ஆட்சியர் தலைமையிலான குழு ஆய்வு செய்து வருவதாகவும், அதுவரை உயர்மின்கோபுரம் அமைக்கும் பணியை நிறுத்தி வைக்க உத்த ரவிடுவதாகவும் மாவட்ட வருவாய் அலுவலர் சுகுமாரன், கோவை எம்.பி. பி.ஆர்.நடரா ஜனிடம் உறுதியளித்தார். திருப்பூர் மாவட்ட ஆட்சியக ரத்தில் மார்க்சிஸ்ட் கட்சியின் சார்பில் கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் திருப்பூர் மாவட்ட வருவாய் அலு வலர் சுகுமாரனை சனியன்று சந்தித்துப் பேசினார். அப்போது அவர் கூறுகை யில், புலம் பெயர்ந்த தொழிலா ளர்களின் துயரம் களையவும், சொந்த மாநிலங்களுக்குச் செல்ல விரும்புவோரை முறையான ஏற் பாடுகளுடன் அனுப்பி வைக்க வும், இங்கே தங்கியிருப்போருக்கு நிவாரண நிதி மற்றும் உணவு வழங்கவும் ஏற்பாடு செய்ய வேண்டும்.

ஊரடங்கு தளர்த்தப்பட்டு தொழிற்சாலைகள் இயங்கத் தொடங்கியிருக்கும் நிலையில் தொழிலாளர், பணியாளர்களுக்கு ஊதியத்தைக் குறைப்பது போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்வ தாக தகவல் வருகிறது. அவர்க ளுக்கு உரிய முழு ஊதியம் வழங் குவதை உறுதிப்படுத்த வேண்டும். தொழிற்சாலைகளில் தொழிலா ளர்களுக்கு ஊதியம் வழங்குவது பற்றி மாவட்ட நிர்வாகம் கண் காணிக்க வேண்டும்.  சிறு, குறு தொழில்களுக்கு கடன் வசதி அளிக்கவும், இஎம்ஐ பிடித்தம் செய்வதை நிறுத்தி வைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும், விளைநிலங்களில் உயர்மின்கோபுரம் அமைக்கும் பணியை நிறுத்த வேண்டும், உரிய இழப்பீடு வழங்க வேண் டும் என்றும் கேட்டுக் கொண்டு, மார்க்சிஸ்ட் கட்சியின் சார்பில் கோரிக்கை மனு அளி்க்கப்பட்டது.

இம்மனுவைப் பெற்றுக் கொண்ட வருவாய் அலுவலர் சுகு மாரன், புலம் பெயர்ந்த தொழி லாளர்களை சொந்த ஊருக்கு அனுப்புவதிலுள்ள குறைகளைக் களைவதாகவும், இங்கு தங்கியி ருக்கக்கூடிய மற்றும் வேலை செய்யக்கூடிய தொழிலாளர்க ளுக்கு நிவாரணம் மற்றும் முழு மையான ஊதியம் வழங்குவ தைக் கண்காணிக்க நடவடிக்கை எடுப்பதாகவும் தெரிவித்தார். அத் துடன் விவசாய விளைநிலங்களில் உயர்மின்கோபுரம் அமைக்கும் பணியை நிறுத்தி வைப்பதாக வும், துணை ஆட்சியர் தலை மையிலான குழு இழப்பீடு குறித்து ஆய்வு செய்து வருவ தாகவும் அதன்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் கூறினார். இந்த சந்திப்பின்போது மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலக் குழு உறுப்பினர் கே.காமராஜ், மாவட்டச் செயலாளர் செ.முத்துக் கண்ணன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஆர்.குமார், விவசா யிகள் சங்க நிர்வாகி எஸ்.வெங் கடாசலம், வாலிபர் சங்க மாவட்டச் செயலாளர் செ.மணி கண்டன் ஆகியோர் உடனி ருந்தனர்.