tamilnadu

வெளிநாட்டு வேலைவாய்ப்பிற்கான சிறப்பு பதிவு முகாம்

திருப்பூர், பிப். 7- தமிழ்நாடு அரசு நிறுவனமான அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறு வனம் கடந்த 40 வருடங்களுக்கும் மேலாக பல்வேறு பிரிவுகளில் ஆயி ரக்கணக்கான மனுதாரர்களை அயல்நாடுகளில் பணியமர்த்தி வருகிறது. தற்போது இங்கிலாந்து மற்றும் அயர்லாந்து நாடுகளில் ரூ.2 லட்சம் முதல் ரூ.2.5 லட்சம் வரை மாதச்சம்பளத்தில் பணிபுரிவதற்கு ஏதுவாக டிப்ளமோ, இளங்கலை அறிவியல் பட்டம் பெற்ற ஆண், பெண் செவிலியர்களுக்கு ஐஇஎல்டி எஸ் (IELTS) பயிற்சி அளித்து பணி யமர்த்த இந்நிறுவனம் ஏற்பாடு செய்து வருகிறது.   மேலும், குவைத் நாட்டில் பணி புரிய பத்தாம் வகுப்பு தேர்ச்சி அல் லது இசிஎன்ஆர் பாஸ்போர்ட் உள்ள 25 வயது முதல் 45 வயதிற் குட்பட்டு செல்லத்தக்க அரபு நாட்டு  ஓட்டுநர் உரிமம் பெற்ற இலகுரக  வாகன ஓட்டுநர்கள்,சமையலர் கள் தேவைப்படுகிறார்கள்.

மாத  ஊதியம் ரூ.25 ஆயிரம் முதல் ரூ.32ஆ யிரம் வரை தரப்படஉள்ளது. மேலும் ரூ.25 ஆயிரம் முதல்  ரூ.28 வரையிலான மாத ஊதியத் தில் வயது 31முதல் 45 வயதிற்குட் பட்ட வீட்டுவேலை செய்யும்  பெண் பணியாளர்கள் பெருமள வில் தேவைப்படுகிறார்கள்.  இப்ப ணிகளுக்கு உணவு, இருப்பிடம், விமானப் பயணச்சீட்டு, மருத்துவச்  சலுகைஆகியவைகள் குவைத்  நாட்டில் வேலையளிப்பவரால் வழங்கப்படும். ஓமன் நாட்டிலுள்ள முன்னணி தனியார் நிறுவனங்கள் பணிபுரிய 21 வயது முதல் 35 வயதிற்குட்பட்ட எலக்ட்ரீசியன், பிளம்பர், பிட்டர், மேசன், பெயிண்டர் வேலைக்கு பெருமளவில் தேவைப்படுகிறார் கள்.  மாத ஊதியம் தகுதி மற்றும் அனுபவத்திற்கேற்றவாறு வழங்கப் படும். எனவே, அயல்நாட்டு வேலை வாய்ப்பு நிறுவனத்தின் சேவையை பயன்படுத்திக் கொள்வதற்கு ஏது வாக விழிப்புணர்வு மற்றும் சிறப்பு பதிவு முகாம் (பிப்.8) சனியன்று மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம், மேட்டுப்பாளையம் ரோடு, துடிய லூர், கோயமுத்தூர் 641029 அலு வலகத்தில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெற வுள்ளது. பதிவுக் கட்டணமாக ரூ.590ம், பட்டதாரிகள், பாரா மெடிக்கல் டெக் னிசியன்கள் ரூ.1003 ம் மற்றும் அலோபதி மருத்துவர்கள் ரூ.1770 ம் செலுத்தி விண்ணப்பப் படி வத்தை பெற்று பதிவு செய்து கொள்ளலாம். இச்சிறப்பு பதிவு முகாமில் பதிவு செய்து கொள்ள விருப்பமுள்ளவர்கள் தங்களின் சுய விவரங்கள் அடங்கிய விண் ணப்பத்துடன் கல்வி, அனுபவச் சான்றிதழ், பாஸ்போர்ட் ஆகிய வற்றின் நகல்கள் மற்றும் ஒரு புகைப்படத்துடன் வந்து கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப் படுகிறார்கள. மேலும் விபரங்க ளுக்கு வலைதளம் www.omcman power.com மற்றும் 044-22505886, 22502267 , 8220634389, 95662 39685 என்ற தொலைபேசி எண்க ளில் தொடர்பு கொள்ளலாம்.