ஈரோடு, ஆக.6- குடிநீர் உள்ளிட்ட அடிப்படை பிரச்சனைகளுக்கு தீர்வு காணக் கோரி ஜனநாயக மாதர் சங்கத் தின் சார்பில் செவ்வாயன்று ஈரோடு மாநகராட்சி மண்டல ஆணையரிடம் மனு அளிக்கப் பட்டது. இதுதொடர்பாக, அனைத்திந் திய ஜனநாயக மாதர் சங்கத்தின் மாவட்ட தலைவர் பி.லலிதா, மாவட்ட செயலாளர் பி.எஸ்.பிர சன்னா, இணை செயலாளர் ஆர்.கோமதி, சூரம்பட்டி வலசு கிளை தலைவர் ஆர்.கவிதா, செயலாளர் பி.ஜெயலட்சுமி ஆகியோர் தலை மையில் செவ்வாயன்று ஈரோடு மாநகராட்சி 3 ஆவது மண்டல ஆணையரிடம் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது, சூரம்பட்டி சாஸ்திரி சாலை உள்ளிட்ட பகுதி களில் துப்பரவு பணிகள் முறை யாக மேற்கொள்ளப்படாததால் கடுமையான சுகாதார சீர்கேடு நிலவி வருகிறது. இதனால் குழந்தை கள், முதியவர்கள் என அனைத்து தரப்பினரும் பல்வேறு நோய் தொற்றுகளுக்கு ஆளாகி மருத்துவ மனையில் சிகிச்சை பெற வேண் டிய சூழலுக்கு தள்ளப்பட்டு வரு கின்றனர். இதேபோல், முறையாக குடிநீர் விநியோகம் செய்யப்படாததால் அப்பகுதியினர் பெரும் சிரமத்திற் குள்ளாகி வருகின்றனர். எனவே, குடியிருப்புகளுக்கு குடிநீர் முறை யாக கிடைக்கும் வகையில் பொது வான இடத்தில் மேல்நிலைத் தொட்டி அமைத்து அனைவருக்கும் குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இதேபோல், பள்ளியின் அருகே அமைந்துள்ள மயானத்தால் பள்ளிக்குழந்தைகள் பாதிப்பிற்குள்ளாகி வருகின்றனர். ஆகவே, மயானத்தை வேறு இடத் திற்கு மாற்ற ஏற்பாடு செய்திட வேண்டும் என அம் மனுவில் கூறப்பட்டுள்ளது.