tamilnadu

img

கிறிஸ்தவ மக்களுக்கு வழிபாட்டு உரிமை கோரி

ஈரோடு,ஜூலை 8- மாணிக்கம்பாளையம், காந்தி நகரில் கட்டப்பட்ட கிறிஸ்தவ ஜெபக் கூடத்தை அனுமதிக்க வலியுறுத்தி ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவ லகத்தை கிறிஸ்தவர்கள் மற்றும்  பொதுநல அமைப்பினர் முற்றுகை யிட்டனர். ஈரோடு, மாணிக்கம்பாளையம், காந்தி நகரில் கட்டப்பட்ட ஒரு கட்டடத்தில் கிறிஸ்தவ ஜெபக்கூடம் செயல்பட்டது. அங்கு ஜெபக்கூடம் நடத்தக்கூடாதென இந்து முன்னணி சார்பில் வீரப்பன்சத்திரம் காவல் துறையினரிடம் மனு கொடுத்தனர். அக்கட்டடத்தை ஆய்வு செய்த காவலர்கள், ஜெபக்கூடத்துக்கான அனுமதி பெறவில்லை. எனவே ஜெபம் செய்யும் பணி நடக்கக்கூடாது என கூறினர். பின்னர், இரு தரப்பின ரையும் அழைத்து வீரப்பன்சத்திரம் காவல் துறையினர் பேச்சுவார்த்தை நடத்தினர். இப்பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை என, ஜெபக்கூடம் நடத்த காவல்துறை யினர்  அனுமதிக்கவில்லை.  இந்நிலையில், திங்களன்று ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவல கத்துக்கு வந்த கிறிஸ்தவர்கள் மற்றும் பொதுநல அமைப்பினர் தங்களது வழிபாட்டு உரிமையை மறுப்பதாகக் கூறி முழக்கம் எழுப்பினர். அப்போது அங்கிருந்த காவலர்கள் முழக்கங்கள் எழுப்புவதை நிறுத்தி மனு கொடுத்துவிட்டு களைந்து செல்ல வேண்டும் என கண் டித்தனர். இதைதொடர்ந்து குறிப் பிட்ட சிலர் மட்டும், மனு அளித்து விட்டு கலைந்து சென்றனர்.