tamilnadu

img

பள்ளி பரிமாற்ற திட்டம்

ஈரோடு, ஜன . 13-  பவானிசாகர் அரசு பள்ளியில் தமிழக அரசின் பள்ளிப்  பரிமாற்ற திட்டம் செயல்படுத்தப்பட்டது. இதில், ஏராள மான மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். தமிழகத்தின் கிராமப்புற பள்ளிகளை நகர்ப்புற பள்ளி களுடன் இணைக்கும் நோக்கில் தமிழக அரசால் பள்ளி பரிமாற்ற திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதில் பள்ளி மாணவர்களுடன் கலந்துரையாடி பள்ளியில் உள்ள  வசதிகள் கற்றல், கற்பித்தல் நிகழ்வுகள், பள்ளியின் சுற்றுப்புறத்தில் உள்ள வளங்களை பார்த்து புதிய அனுப வம் பெற இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக ஈரோடு மாவட்டம் பவானிசாகர் பகுதியில் கோடேபாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளிக்கு, பவானி சாகர் அரசு மேல்நிலைப் பள்ளியை சேர்ந்த 20 மாணவ-மாணவியர் கொண்ட குழு பள்ளி பரிமாற் றத் திட்டத்தின் கீழ் வருகை தந்தனர். அவர்களுக்கு கோடேபாளையம் பள்ளி மாணவர்கள் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர். இதன் பின்னர் பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டன. மேலும் மாணவ, மாணவிகளுக்கு வகுப்பறைச் சூழல்  அன்றாட வாழ்வில் அறிவியல் குறித்த எளிய சோதனை கள் கணித பாடத்தில் இணையவழித் தேர்வு குறித்து விளக்கப்பட்டன.  இதனை தொடர்ந்து மாணவ,மாணவியர்கள் கரகாட் டம்நாட்டுப்புற பாடல்,பழைய இசைத்தல், பேச்சு போன்ற பல்வேறு தனித் திறமைகளை வெளிப்படுத்தி னர்.கள பயணமாக தொட்டம்பாளையம் இந்தியன் ஓவர்சீஸ் வங்கிக்கு மாணவர்கள் அழைத்துச் செல்லப்பட்டனர். அங்கு வங்கி மேலாளர் கோமதி  அவர்கள் வங்கி நடைமுறைகள் வைப்பு நிதி, பண பரிமாற்றம், சேமிப்பின் முக்கியத்துவம் குறித்து விளக்கினர். நிறைவாக பள்ளி பரிமாற்றத்தின் மூலம் தாங் கள் பெற்ற அனுபவங்களை ஒவ்வொரு மாணவ மாணவிகளும் விளக்கினர்.

;