tamilnadu

img

சேலத்தில் உடல் தான உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி

சேலம், ஏப். 20 -சேலத்தில் உடல் தான உறுதி மொழி படிவம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.தமிழ்நாடு ஹைட்ராலிக் மற்றும் எர்த் மூவர்ஸ் நலச்சங்கம் அறிமுக விழா, அடிப்படை உரிமைகள் பிரச்சனைகள் குறித்த கருத்தரங்கு மற்றும் கஜா புயலால் பாதிப்படைந்த மக்களுக்கு நிவாரண பணி செய்த கலாம்நண்பர்கள் குழுவிற்கு பாராட்டு விழா சேலத்திலுள்ள தனியார் அரங்கில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் உச்சநீதிமன்ற வழக்கறிஞர் விமல்காந்த் சிறப்புரையாற்றினார்.இதைத்தொடர்ந்து எர்த் மூவர்ஸ் உறுப்பினர்கள், கலாம் நண்பர்கள் சார்பில் ரத்த தானம் மற்றும் உடல் உறுப்பு தானம் பற்றிய விழிப்புணர்வு நடைபெற்றது. இதில் 10 பேர் உடல்தானம் செய்வதற்கான உறுதிமொழி படிவத்தை சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் மருத்துவர் இமாமிடம் அளித்தனர். இந்நிகழ்வில் சங்கத்தின் அமைப்புச் செயலாளர் சரவணன், நிறுவனத் தலைவர்கள் சாமி, செல்வமூர்த்தி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

;