tamilnadu

img

அரசு ஊழியர்களை மிரட்டும் ஆளும் கட்சியினர் உடுமலையில் கண்டன ஆர்ப்பாட்டம்

உடுமலை, ஜன. 10- அரசு ஊழியர்களை மிரட்டும் ஆளும்கட்சியின் முன்னாள் கவுன்சி லர்கள் மற்றும் போலி பத்திரிகை கும்பல்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி அரசு ஊழியர்கள் வெள்ளியன்று உடுமலை கோட்டாட் சியர் அலுவலகத்தின் முன்பு ஆர்ப் பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் உடுமலை நகாரட்சி ஊழியர்கள் மற்றும் பல் வேறு துறை சார்ந்த அரசு ஊழியர் களை மிரட்டும் ஆளும் கட்சியின் முன்னாள் கவுன்சிலர்கள் மற்றும் அவர்களுக்கு உதவும் வகையில் பொய்யான செய்திகளை வெளி யிடும் பத்திரிக்கையை தடை செய்ய வேண்டும். அரசு ஊழியர்களை வேலை செய்யாமல் தடுக்கும் முன் னாள் கவுன்சிலர்கள் மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண் டும் என வலியுறுத்தி நீதி தராசை கையிலேந்தி உடுமலை கோட்டாட் சியர் அலுவலகத்தின் முன்பு நடை பெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு வட்டக் கிளை தலைவர் வைரமுத்து தலைமை தாங்கினார். அகில இந்திய விவ சாய தொழிலாளர் சங்கத்தின் மாவட்ட தலைவர் சி. சுப்பிரமணியன், வட்டக் கிளை செயலாளர் வெங்கிடுசாமி, அரசு ஊழியர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் பாலசுப்பிரமணியம், மாவட்ட இணை செயலாளர் திலிப், மாவட்டத்துணை தலைவர் அன்வ ருல்ஹக், நெடுஞ்சாலைத் துறை யின் பொது செயலாளர் அம்சராஜ், மடத்துகுளம் செயலாளர் முருகசாமி மற்றும் இணை செயலாளர்கள் ஜெக தீஸ்வரன், செல்வராஜ், புஷ்பவள்ளி, சுரேஷ்குமார், நிர்வாகிகள் சண் முகசுந்தரம், ஆனந்தராஜ், நாகராஜ், செல்வக்குமார், ஈஸ்வரி, பரமேஸ்வரி, வைரமுத்து, முத்துசாமி உள்ளிட்ட பலர் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு கண்டன முழக்கங்களை எழுப்பினர்.

;