அரசு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
அவிநாசி, மே 8- அரசு ஊழியர்களின் ஓய்வு வயதை 59 ஆக நீட்டிருப்பதை கண் டித்து அரசு ஊழியர் சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட் டனர். சரண் விடுப்பு ஊதியம் பறிப்பு, பொது சேம நலநிதி வட்டி விகிதம் குறைப்பு, அகவிலைப்படி உயர்வு முடக்கம், ஓய்வுபெறும் வயதை 59 ஆக உயர்த்தி இளைஞர்களின் வேலை வாய்ப்பு பறிப்பது போன்ற நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் தமிழக அரசைக் கண்டித்து தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் சார்பில் பல்வேறு இடங்களில் கண் டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற் றன.
திருப்பூர் மாவட்டம், அவிநாசி நெடுஞ்சாலை துறை அலுவல கம், ஊராட்சி ஒன்றிய அலுவல கம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட் டத்தில் அரசு ஊழியர் சங்கத்தின் நிர்வாகிகள் ராமன், கருப்பன், சுமதி, கோபாலகிருஷ்ணன், முருகே சன் உள்ளிட்ட பலர் கலந்து கொண் டனர். தாராபுரத்தில் கோட்ட பொறி யாளர் அலுவலகம் முன்பு நடை பெற்ற போராட்டத்திற்கு நெடுஞ்சா லைத்துறை சாலைப்பணியாளர் சங்கத்தின் கோட்ட தலைவர் தில் லையப்பன் தலைமை தாங்கினார். இதேபோல், தாராபுரம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு நடை பெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு வட்டக் கிளை செயலாளர் ஈஸ்வரமுர்த்தி தலைமை தாங்கினார். இதில் ஏராள மானோர் கலந்து கொண்டனர்.
தருமபுரி
தருமபுரி மாவட்டம், நக ராட்சி அலுவலகம் முன்பு வட்ட செயலாளர் ஜெயவேல், வட்டாட் சியர் அலுவலகம் முன்பு வட்ட தலை வர் குமார், தருமபுரி அரசு மருத்து வக்கல்லூரி மருந்தாளுநர் சங்க மாவட்ட தலைவர் ஆர்.செல்வ குமார் ஆகியோர் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டங்களில் மாவட்ட செய லாளர் ஏ.சேகர், மாவட்ட பொருளா ளர் கே.புகழேந்தி, ஊரகவளர்ச்சித் துறை அலுவலர் சங்க மாநிலசெயற் குழு உறுப்பினர் என்.ராமஜெயம், பொதுநூலகத்துறை ஊழியர் சங்க மாநிலதலைவர் பிரபாகரன், தமிழ் நாடு சத்துணவு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் சி.எம்.நெடுஞ்செ ழியன் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்று கோரிக்கைகளை விளக்கிப் பேசினர்.
இதேபோல், நல்லம்பள்ளியில் தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் சி.காவேரி, அரசு ஊழியர் சங்க மாவட்ட தலை வர் எம்.சுருளிநாதன் மற்றும் அரூரில் மாவட்ட துணைதலைவர் பி.எஸ்.இளவேனில், பாலக்கோட் டில் மாவட்ட இணைசெயலாளர் எஸ்.குணசேகரன், பாப்பிரெட்பட் டியில் மாவட்ட துணைத்தலைவர் அண்ணாகுபேரன், காரிமங்கலத் தில் மாவட்ட இணைசெயலாளர் நாகாராணி, பென்னாகரத்தில் மாவட்ட இணைசெயலாளர் எஸ்.சரவணன் ஆகியோர் தலைமையில் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன.