tamilnadu

img

இளைஞர்களின் வேலைவாய்ப்பை பறிக்கும் அரசாணையை திரும்பப்பெறுக அரசு ஊழியர் சங்கத்தினர் மக்கள் சந்திப்பு இயக்கம்

கோவை, நவ.12- இளைஞர்களின் வேலை வாய்ப்பைப் பறிக்கும் அரசா ணையை ரத்து செய்ய வலியு றுத்தி தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம்சார்பில் கோவையில் செவ் வாயன்று மக்கள் சந்திப்பு பிரச் சார இயக்கம் நடைபெற்றது.  இளைஞர்களின் வேலை வாய்ப்பைப் பறிக்கும் அரசாணை 56ஐ ரத்து செய்திட வேண்டும். அரசு துறைகளில் அவுட்சோர்சிங் முறையை மாற்றி, ஆட்குறைப்பு நடவடிக்கையை கைவிட வேண் டும். அரசு துறைகளில் காலியாக உள்ள நாலரை லட்சம் காலிப் பணி யிடங்களை நிரப்பிட வேண் டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக் கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் மாநிலம் முழுவதும் மக்கள் சந் திப்பு பிரச்சார இயக்கம் நடை பெற்று வருகிறது. இதன்ஒருபகுதியாக திங்க ளன்று நீலகிரி மாவட்டத்தில் துவங்கிய பிரச்சார இயக்கம் செவ் வாயன்று கோவை மாவட்டத் திற்கு வருகை புரிந்தது. இதைத் தொடர்ந்து, பெரியநாயக்கன் பாளையம், ஐடிஐ அலுவலகம், வணிக வரித்துறை, நெடுஞ் சாலைத்துறை, சுகாதாரத்துறை அலுவலகம் மற்றும் தெற்கு தாலுகா அலுவலகம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் மக்கள் சந்திப்பு பிரச்சாரம் நடைபெற்றது. தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் சு.குமார் தலைமையில் நடை பெற்ற இந்த இயக்கத்தில் சங்க மாநில செயலாளர் பரமேஷ்வரி, மாநில துணை தலைவர்கள் என்.சீனிவாசன், ராஜ்குமார் மற்றும் மாவட்ட துணை தலைவர் நட ராஜன், பொருளாளர் கிருஷ்ண மூர்த்தி, சாமிகுணம், மாவட்ட இணை செயலாளர் ஜெகநாதன், ரவிச்சந்திரன், சாரதாமணி, அய்யாசாமி உள்ளிட்ட ஏராளமா னோர் பங்கேற்றனர்.

;