tamilnadu

img

டிக்டாக் செயலியை தடை செய்ய கோரிக்கை

திருப்பூர், ஜன. 13 – பெண் குழந்தைகள் சீரழிவிற்கு காரண மான டிக் டாக் செயலியை தடை செய்யு மாறு மகளை இழந்த தந்தை திருப்பூர் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்தார். காங்கயம் வட்டம், நிழலி கிராமம், சக்தி விநாயகபுரத்தைச் சேர்ந்தவர் சு.ஆறுமுகம். இவரது மகள் ஹேமலதா கொடுவாய் அரசு பள்ளியில் 10ஆம்  வகுப்பு வரை படித்தவர். கடந்த 18 மாதங்களுக்கு முன்பு பல்லடம், செலக்கரச்சல் பகுதியைச் சேர்ந்த செ.வேல் முருகன் என்பவர் டிக்  டாக் செயலி மூலம் ஹேமலதாவுடன் தொடர்பு ஏற்படுத்தி இருக்கிறார். வீட்டில் பெற்றோர் இல்லாத சமயம் அங்கு வந்து பழகிய நிலையில் ஹேம லதா 2 மாத கர்ப்பமானார். தன்னை திரும ணம் செய்து கொள்ளும்படி ஹேமலதா கேட்டதற்கு வேல்முருகன் மறுத்துவிட்டார். இது தெரியவந்தால் அவமானம் என கருதி ஹேமலதா கடந்த டிசம்பர் மாதம் மண் ணெண்ணெயை உடலில் ஊற்றி தீக்குளித் தார்.  மருத்துவ சிகிச்சை பலனளிக்காமல் டிசம்பர் 27ஆம் தேதி  உயிரிழந்தார். ஏற்கெனவே திருமணமான வேல்முரு கன் தங்களது மகளை ஏமாற்றியதால் தற்கொலை செய்யும் நிலை ஏற்பட்டது என பெற்றோர் காங்கயம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதன் மீது காவலர்கள் போக்சோ சட்டத்தில் வழக்குப் பதிவு செய்து வேல்முருகனை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்நிலையில் ஹேமலதா தந்தை ஆறு முகம் திங்களன்று திருப்பூர் மாவட்ட ஆட்சி யரிடம் அளித்த புகார் மனுவில், தன் மக ளின் சாவுக்குக் காரணமான வேல்முருக னுக்கு சட்டப்படி கடும் தண்டனை வழங்க வேண்டும், பெண் குழந்தைகள் சீரழிவுக்கு காரணமான டிக் டாக் செயலியைத் தடை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொண்டார்.

;