tamilnadu

img

"டேன் டீ" ஊழியர்களுக்கு நிவாரணம் வழங்கிடுக - தேயிலை தோட்டத் தொழிலாளர்கள் சங்கத்தினர் மனு

 பொள்ளாச்சி, ஜூன் 11- வால்பாறை “டேன் டீ” தேயிலை தோட்டத் தொழிலாளர்களுக்கு நிவாரணம் வழங்கிடக்கோரி, வால்பாறை தேயிலை தோட்டத் தொழிலாளர்கள் மற்றும் அலுவ லர்கள் சங்கத்தினர் கோட்ட மேலாளரிடம் மனு அளித்தனர்.  இதுகுறித்து தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் மற்றும் அலுவலர்கள் சங்கத்தின் (சிஐடியு) கோவை மாவட்டச் செயலாளர் பி.பரமசிவம் கூறுகையில், தற் போது கொரோனா ஊரடங்கு காலம் அம லில் உள்ளதால்,  வால்பாறை “டேன் டீ” தேயிலை தோட்டத் தொழிலாளர்கள் பணிக்குச் செல்ல முடிவதில்லை. இவர்க ளுக்கு தமிழ்நாடு   அரசு ஊழியர்களுக்கு வழங்குவதைப்போல,  ஊதியம், ஊக்கத் தொகை உள்ளிட்ட நிவாரணங்களை வழங்க வேண்டும்.

கடந்த 5 ஆண்டுகளாக வால்பாறை “டேன் டீ” தொழிலாளர்க ளுக்கு வழங்க வேண்டிய ஈட்டிய விடுப்பு, மருத்துவ கால விடுப்பு, போக்குவரத்து பயணப்படி, ஓய்வு பெறுபவர்களுக்கான பண பலன்கள் என எதுவும் வழங்கப்ப டவில்லை.  மேலும், இவர்கள் குடியிருக்கும் பகுதிகளுக்கான அடிப்படை வசதிகளும் இதுவரை செய்து தரப்படவில்லை. மேலும், வனவிலங்கு தொல்லைகளும் அதிகளவில் உன்னதால் உடனடியாக தமிழக அரசு தகுந்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டு மென தெரிவித்தார். முன்னதாக சங்கத்தின் வால்பாறை  தலைவர் முனீஸ்வரி, பொருளாளர் சக்திவேல்,  மணிகண்டன் உள்ளிட்டோர் கோட்ட மேலாளாரிடம் மனு அளித்தனர். இதனையடுத்து மனுவை பெற்றுக் கொண்ட வால்பாறை “டேன் டீ”  கோட்ட மேலாளர் இதுகுறித்து நிர்வாகத்தின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு நட வடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரி வித்தார்.

;