தருமபுரி, செப்.20- ஊதிய முரண்பாடுகளை களையக்கோரி தருமபுரி சுகா தாரப் பணிகள் துணை இயக் குனர் அலுவலகம் முன்பு தமிழ் நாடு சுகாதார மேற்பார்வை யாளர்கள் சங்கம் சார்பில் பெருந் திரள் முறையீடு போராட்டம் நடை பெற்றது. முதியோர்-இளையோர் ஊதிய முரண்பாடுகளை களைய வேண்டும். காலம் கடந்து ஆய்வுக் கூட்டம் நடத்துவதை கைவிட வேண்டும். மாதாந்திர அறிக் கைகள், ஆன்லைன் பணிகள், நகலெடுப்பது போன்ற செலவு களை ஈடு செய்ய சில்லறை செலவின தொகையாக ரூ.700 வழங்குவதற்கு இயக்குனர் எழுத்துபூர்வமான ஆணை வழங்கி உள்ளார். ஆனால் பல மாவட்டங்களில் இத்தொகை வழங்கப்படாத நிலை உள்ளது. எனவே இத்தொகையை பகுதி நேர, சமுதாய சுகாதார செவிலியர் களுக்கு உடனடியாக வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு சுகாதார மேற்பார்வை யாளர்கள் சங்கம் சார்பில் தருமபுரி சுகாதாரப் பணிகள் துணை இயக்குனர் அலுவலகம் முன்பு பெருந்திரள் முறையீடு போராட்டம் வெள்ளியன்று நடைபெற்றது. இப்போராட்டத்திற்கு மாவட்டத் தலைவர் எஸ்.கனக வள்ளி தலைமை வகித்தார். மாநில பொதுச் செயலாளர் எஸ்.தமிழ் செல்வி, மாவட்டச் செயலாளர் புவனேஷ்வரி, பொருளாளர் கிருஷ்ணம்மாள், மாவட்ட துணைத் தலைவர்கள் வசந்தி, மாதம்மாள், வளர்மதி, மாவட்ட இணைச்செயலாளர்கள் பூங்குழலி, மணிமேகலை, மூக்கம் மாள் ஆகியோர் கோரிக்கையை விளக்கிப் பேசினர். தமிழ்நாடு பட்டுவளர்ச்சித்துறை ஊழியர் சங்க மாநிலத் தலைவர் எம்.சிவப் பிரகாசம் வாழ்த்திப் பேசினார்.போராட்டத்தின் நிறைவாக சுகா தாரப் பணிகள் துணை இயக்குனர் மருத்துவர் ஜெகதிஷிடம் சுகா தார மேற்பார்வையாளர்கள் சங்கத்தின் சார்பில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.