tamilnadu

குறைந்த கட்டணப் பேருந்துகளை இயக்கிட பொதுமக்கள் கோரிக்கை

கோவை, அக். 26- கோவை விளாங்குறிச்சி சாலையில் குறைந்த கட்டணப் பேருந்துகளை இயக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர். கோவை விளாங்குறிச்சியை ஒட்டி யுள்ள பகுதிகளுக்கு பீளமேடு, ஹோப்ஸ் வழியாக அரசுப் பேருந்துகள் இயக்கப் பட்டு வருகின்றன. இதில் விளாங்குறிச்சி சாலையிலிருந்து காளப்பட்டி வரை செல்ல ஒரு பேருந்து மட்டுமே உள்ளது. இப் பகுதியில் இருந்து சரவணம்பட்டி செல்ல 10 நிமிடமே ஆகும் என்கிற நிலையில், ஒரு பேருந்து கூட இல்லாததால் அப்பகுதி மக் கள் பீளமேடு, லட்சுமி மில்ஸ் சுற்றி காந்தி புரம் வழியாக சரவணம்பட்டி செல்ல ஒன் றரை மணிநேரம் வரை ஆகிறது.  அருகிலுள்ள சேரன் மாநகருக்கு வரும் பேருந்துகளில் பெரும்பாலானவை சொகு சுப் பேருந்துகளாக கட்டணம் அதிகமாக இருப்பதால் அனைத்து மக்களாலும் இத னைப் பயன்படுத்த முடிவதில்லை. இதன் காரணமாக இப்பகுதிகளிலிருந்து பயிலும் மாணவர்களும், தினசரி பணிக்குச் செல் பவர்களும் குறைந்த கட்டணப் பேருந்துக் காக நீண்ட நேரம் காத்திருக்க வேண்டி யுள்ளது. எனவே குறைந்த கட்டண அரசுப் பேருந்துளை விளாங்குறிச்சி சாலையில் சர வணம்பட்டி வரை இயக்கிட வேண்டும் அப்பகுதி பொதுமக்கள் வலியுறுத்தியுள்ள னர்.