tamilnadu

கிராமத்தை இரண்டாகப் பிரிக்கும் நெடுஞ்சாலை பாதை அமைத்துத்தர பொதுமக்கள் கோரிக்கை

திருப்பூர், ஆக. 23 – திருப்பூர் – தாராபுரம் தேசிய நெடுஞ்சாலையாகத் தரம் உயர்த்தப்பட்ட நிலையில் நிழலி கிராமம் இரண்டாகத் துண்டிக்கப்பட்ட நிலை ஏற்பட் டுள்ளது. இப்பகுதியை இணைக்கும் வகையில் பாதை அமைத்துத் தர வேண்டும் என நிழலி கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். திருப்பூர் மாவட்டம் கொடு வாய் அருகேயுள்ள நிழலி கிரா மத்தை சேர்ந்த பொதுமக்கள் பலர் சேர்ந்து புதன்கிழமை மாவட்ட ஆட்சியர் அலுவலகத் தில் அளித்த மனுவில் கூறி யிருப்பதாவது: நிழலி கிராமத்தில் 300-க் கும் மேற்பட்ட வீடுகள் உள் ளன. பள்ளிகள், கூட்டுறவு பால் சங்கம் உள்ளிட்டவையும் செயல்பட்டு வருகின்றன. பால் சங்கத்திற்கு பால் வாங்க அருகாமை கிராமங்களில் இருந்தும் பொதுமக்கள் பலர் நாள்தோறும் வந்து செல்கின் றனர். எங்களது கிராமத்தின் வழியாக செல்லும் திருப்பூர் - தாராபுரம் சாலையானது சமீபத்தில் தேசிய நெடுஞ் சாலையாக தரம் உயர்த்தப் பட்டு அதற்கேற்ப கட்டமைப்பு வசதிகள் செய்யப்பட்டன. இத்தகைய சூழலில் தேசிய நெடுஞ்சாலை நிர்வாகம் சார்பில் சாலையில் அமைக்கப் பட்ட மையத் தடுப்பானது எங்களது கிராமத்தை இரண் டாக பிரித்து விட்டது. கிரா மத்தில் ஒரு பக்கத்திலிருந்து சாலையைக் கடந்து மறு பக்கத்திற்கு செல்லும் வகை யில் வழி இல்லாமல் மறைத்து மையத்தடுப்பு அமைத்துள் ளனர். இதனால் கிராமத்தில் வாக னங்களில் ஒரு புறத்திலிருந்து மறுபுறத்திற்கு செல்ல 3 கி.மீ தூரம் வரை சுற்றி வர வேண்டி யுள்ளது. பள்ளிகள், வேலை களுக்குச் செல்வோர் தொடங்கி இதர தேவைகளுக்காக வரு வோர் அனைவரும் பாதிக்கப் பட்டு வருகின்றனர். எனவே நிழலி கிராமத்தில் தேசிய நெடுஞ்சாலையை எளிதில் கடந்து ஒரு புறத்திலிருந்து மறுபுறம் செல்ல பாதை அமைத்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டு கொண்டுள்ளனர்.

;