tamilnadu

img

அரசு பள்ளிகளை பாதுகாத்திடுக - நீட் தேர்வை ரத்து செய்திடுக மாணவர் சங்கம் போராட்டம் : காவல்துறை அராஜகம் - கைது

கோவை, ஜூன் 13– அரசுப் பள்ளிகளை பாதுகாக்க வேண்டும் என்கிற கோரிக்கையை முன்வைத்து வியாழனன்று கோவை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகம் முன்பு போராட் டத்தில் ஈடுபட்ட இந்திய மாணவர் சங்கத்தினரை காவல்துறையினர் பலவந்தமாகக் கைது செய்ய முயன்ற தால் தள்ளு முள்ளு ஏற்பட்டது.  நீட் தேர்வில் தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வேண்டும். அரசு பள்ளிகளைப் பாதுகாக்க வேண்டும், தனியார் பள்ளிகளின் கட்டணக் கொள்ளையைத் தடுத்திடவும், புதிய கல்விக் கொள்கையைத் திரும்பிப் பெற வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து இந்திய மாணவர் சங்கத்தினர் தமிழகம் முழுவதும் போராட்டம் நடத்தி வரு கின்றனர். இதன் ஒருபகுதியாக கோவை டவுன்ஹால் பகுதியில் உள்ள முதன்மை கல்வி அலுவல கம் முன்பு போராட்டம் நடத்த உள் ளதாக மாணவர் சங்கத்தினர் அறி வித்திருந்தனர். இதனையடுத்து வியாழனன்று முதன்மை கல்வி அலுவலகம் முன்பு ஏராளமான காவல் துறையினர் குவிக்கப்பட்டிருந்தனர்.  இந்நிலையில் மணிக்கூண்டு முன்பு இருந்து மாணவர் சங்கத்தின் மாநில துணை தலைவர் நிருபன் சக்கர வர்த்தி, மாவட்ட தலைவர் தினேஷ், மாநில செயற்குழு உறுப்பினர் எஸ்.காவியா ஆகியோர் தலைமையில் மாணவர்கள் ஊர்வலமாக முதன்மை கல்வி அலுவலகம் நோக்கி வந்தனர். ஊர்வலத்தை தடுத்து நிறுத்திய காவல் துறையினர் போராட்டத்திற்கு அனுமதி இல்லை என்பதால், அனை வரையும் கைது செய்வதாகத் தெரி வித்தனர். இதற்கு மாணவர்கள், நாங் கள் கல்வி அலுவலரைச் சந்தித்து கோரிக்கை மனுவைக் கொடுக்க வேண்டும் எனத் தெரிவித்தனர். ஆனால் காவல் துறையினர் இதற்கு அனுமதிக்காமல் பலவந்தமாக மாண வர்களைக் கைது செய்ய முயன்றனர். இதனால் காவல்துறையினருக்கும் மாணவர் சங்கத்தினருக்கும் இடையே தள்ளு முள்ளு ஏற்பட்டது.  இதனையடுத்து காவல்துறை யினர் மாணவர்களை தரதரவென இழுத்தும், குண்டுக்கட்டாக தூக்கியும் காவல்துறை வாகனத்தில் ஏற்றினர். இதனால் பல மாணவர்களுக்குக் காயம் ஏற்பட்டது. இதுகுறித்து நிருபன்சக்கரவர்த்தி கூறுகையில், அரசுப் பள்ளிகளைப் பாதுகாக்க வேண்டும் என்று சொல்வது தேசத் துரோக நடவடிக்கை என்பதுபோல் காவல் துறையினர் நடந்து கொள் கின்றனர். அமைதியான முறையில் கல்வி அலுவலரைச் சந்தித்து மனு கொடுக்க வந்தவர்களை அராஜக முறையில் கைது செய்கின்றனர். மாணவிகளை ஆண் காவலர்களைக் கொண்டு குண்டு கட்டாகத் தூக்கி வாகனத்தில் ஏற்றுகின்றனர். மாணவி கள் கையைப் பிடித்து இழுப்பது, துப்படாவைப் பிடித்து இழுப்பது போன்ற கொடிய செயல்களில் ஈடு பட்டனர். இதுபோன்ற அநாகரிக மான செயலை இந்திய மாணவர் சங் கம் வன்மையாக கண்டிப்பதாகத் தெரிவித்தார். இப்போராட்டத்தில் ஈடு பட்ட அனைவரும் கைது செய்யப் பட்டனர். 

ஈரோடு
ஈரோடு மாவட்டத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் கழிப்பிட வசதி, குடிநீர் வசதி, கட்டிட வசதி போன்ற அடிப்படை வசதிகள் இல்லாமல் பெரும்பாலான பள்ளிகள் செயல் பட்டு வருகின்றன. அதுபோன்ற பள்ளி களை ஆய்வு செய்து, அங்கு அடிப் படை வசதிகளை மேம்படுத்த நட வடிக்கை எடுக்க வேண்டும். தனியார் பள்ளிகளில் அரசு நிர்ணயித்த கட்ட ணத்தை விட முறைகேடாக கட்டணம் வசூலிக்கும் தனியார் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். கடந்த 2017-2018ம் கல்வியாண்டில் 12ம் வகுப்பு முடித்த அரசு பள்ளி மாணவர்களுக்கு தற்போது வரை இலவச மடிக்கணினி(லேப்டாப்) வழங்கப்பட வில்லை.  எனவே, அனைத்து மாணவர்க ளுக்கும் லேப்டாப் வழங்க வேண்டு மென வலியுறுத்தி இந்திய மாணவர் சங்கத்தின் ஈரோடு மாவட்ட துணை செயலாளர் வினிஷா தலைமையில் முதன்மை கல்வி அலுவலர் அலுவல கத்தில் மனு அளித்தனர். இதில் மாவட்ட நிர்வாகிகள் செ.நவீன் குமார், ப.பூவரசன் உள்ளிட்டோர் உட னிருந்தனர்.

;