tamilnadu

விகிதாசார பிரதிநிதித்துவ அடிப்படையில் தேர்தல் சீர்திருத்தம் தேவை: கே.சுப்பராயன் எம்.பி.,

திருப்பூர், ஆக. 8 - கடந்த நாடாளுமன்றத் தேர் தல் கொடுத்த முக்கியமான படிப் பினை, தேர்தல் சீர்திருத்தம் செய்ய வேண்டும் என்பதா கும். விகிதாச்சார பிரதிநிதித் துவ அடிப்படையில் மக்கள் பிர திநிதிகளைத் தேர்ந்தெடுக்கும் இந்த சீர்திருத்தங்களை மேற் கொள்ள விவாதம் தேவை என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நாடாளுமன்றத் தொகுதி உறுப் பினர்  கே.சுப்பராயன் கூறினார். திருப்பூரில் புதன்கிழமை செய்தியாளர்களுக்குப் பேட்டி யளித்த கே.சுப்பராயன் எம்.பி., செய்தியாளர்களிடம் கூறியதா வது: கடந்த நாடாளுமன்றத் தேர்தல் கற்றுக் கொள்ள வேண் டிய பல படிப்பினைகளை கொடுத்திருக்கிறது. அதில் முத லாவது படிப்பினை தேர்தல் சீர்திருத்தம் ஆகும். 63 சதவிகித மக்கள் ஆர்எஸ்எஸ், பாஜகவின் மோடி அதிகாரத்துக்கு வரக் கூடாது என வாக்களித்திருக்கின் றனர்.

ஆனால் மூன்றில் 1 பங்கு வாக்குகள் பெற்ற கட்சி மூன்றில்  2 பங்கு இடங்களைப் பெற்றி ருக்கிறது. ஜனநாயக அரசியல் அமைப்பில் மக்கள் வாக்களித்த சதவிகித அடிப்படையில் வாய்ப் புக் கிடைக்கவில்லை. எனவே விகிதாச்சார பிரதிநிதித்துவ அடிப்படையில் தேர்தல் முறை  கொண்டு வர விவாதம் தேவை  என இடதுசாரிகள் கோருகி றோம். கம்யூனிஸ்டுகள், இடதுசாரி கள் எச்சரித்த ஆபத்து தற்போது தொடங்கியிருக்கிறது. நாடு சுதந் திரம் பெற்றபோது காஷ்மீர் இந் தியாவின் பகுதியாக இல்லை என்பது நிதர்சன உண்மை. இந் திய அரசு அளித்த வாக்குறுதி அடிப்படையில்தான் 370 பிரிவு, 35 ஏ அரசியல் சாசன பிரிவுகள் சேர்க்கப்பட்டது. ஆனால் இப் போது மோடி, ஷா குறுங்குழு எந்த கேள்வியுமின்றி அதை ரத்து செய்துள்ளனர். அதானி, அம் பானி கார்ப்பரேட் நிறுவனங்க ளுக்காகத்தான், காஷ்மீரின் வரம்பற்ற இயற்கை வளங்களை முழுமையாக கபளீகரம் செய்வ தற்காக மோடி, ஷா அவர்களின் கைக்கருவியாக செயல்பட்டுள் ளனர். பட்ஜெட்டில் விவசாயிக ளுக்கு எதுவும் செய்யவில்லை. மேற்கு மாவட்டங்களில் விளை நிலங்களில் உயர்மின் கோபு ரங்கள் அமைப்பதற்கு விவசாயி கள் எதிர்ப்புத் தெரிவிப்பது பற்றி பேசியதற்கும் ஆட்சியாளர்கள் பதிலளிக்கவில்லை. தொழிற் சங்க இயக்கம் நூறாண்டுகள் போராடிப் பெற்ற தொழிலாளர் உரிமைகளை இரண்டே நாட்க ளில் இந்த ஆட்சியாளர்கள் நீக்கு கின்றனர். வெளிநாட்டு நேரடி முதலீட்டாளர்கள், கார்ப்பரேட் நிறுவனங்கள் தங்குதடையின்றி கொள்ளையடிக்க தொழிலாளர் உரிமை பறிக்கப்படுகிறது.  வரலாறு காணாத வேலை யில்லா திண்டாட்டம் இந்தியா வில் நிலவுகிறது. 4.70 லட்சம் ஆலைகள் மூடப்பட்டுள்ளது. விவசாயிகள், தொழிலாளர், வணிகர்கள், உள்நாட்டு தொழில் துறையினர் ஒவ்வொருவரும் பாதிக்கப்படுகின்றனர். இந்த  அரசு மக்கள் விரோத அரசாக, தேச விரோத அரசாக, ஜனநாயக விரோத அரசாக உள்ளது. விவ சாயிகள், தொழிலாளர்கள் இணைந்துப் போராடுவதன் மூலம்தான் இந்த ஆட்சியாளர் களைப் பணிய வைக்க முடியும். தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) சட்டம் மிக மோசமா னது. அரசுக்கு எதிரான எந்தப் போராட்டத்தையும் ஒடுக்க இந்த  கொடுமையான சட்டத்தை பயன் படுத்துவார்கள். ஆனால் எத் தனை சட்டங்கள் போட்டாலும் விவசாயிகள், தொழிலாளர்கள், பாதிக்கப்படும் மக்களின் போராட்டம் வெடிக்கும்.

மாநில மக்கள் பிரதிநிதியா அதிமுக?

தமிழகத்தில் மக்களின் உணர் வுகளைப் பிரதிபலிக்க வேண்டிய மாநில ஆட்சியாளர்கள் மோடி யின் கொத்தடிமைகள் என கருதக் கூடிய அளவுக்கு நடந்து கொள் கின்றனர். இவர்கள் எப்படி தமிழக மக்களின் பிரதிநிதிகளாக இருக்க முடியும்? திருப்பூர் நாடாளுமன்றத் தொகுதியைப் பொறுத்தவரை இந்த ஆட்சியாளர்களின் கொள்கை காரணமாக ஏற்கெ னவே 30 சதவிகித சிறு, குறு தொழில்கள் காணாமல் போய் விட்டன. கோவையிலும் இது தான் நிலை. பஞ்சாலைகள் நலிந் துவிட்டன. இந்த தொழில்களை அழித்தால்தான் வெளிநாட்டு நேரடி முதலீட்டாளர்கள், கார்ப்ப ரேட்டுகள் இங்கு தொழில் செய்ய  முடியும் என இந்த அரசு செயல் படுகிறது. ஜாப் ஒர்க் நிறுவனங் களுக்கு ஜிஎஸ்டி வரியில் விலக்கு அளிக்க வேண்டும் என்று நாடா ளுமன்றத்தில் கோரியிருக்கி றோம்.  அத்துடன் இத்தொகுதிக்கு உட்பட்ட அந்தியூர் ஒன்றியப் பகுதிகளில் குடிநீர் பிரச்சனை யைத் தீர்க்க, மேட்டூர் அணை யின் வெள்ளப் பெருக்கு கால உபரிநீரை அந்தியூர், பவானி வட்டார குளம், குட்டைகளில் தேக்கும் திட்டத்தை அமல்ப டுத்த வேண்டும், கோபி குண்டே றிப்பள்ளம் அணை தேவை என் பது குறித்த விவசாயிகள் கோரிக்கை மத்திய அரசின் கவ னத்துக்குக் கொண்டு செல்லப் பட்டுள்ளது. மோடியின் பழிவாங் கும் நோக்கில் ரயில்வே பட்ஜெட் டில் தமிழகம் புறக்கணிக்கப்பட் டுள்ளது.

மண்டியிடுவோருக்கு சலுகை, பணியாதவர்களுக்கு தண்டனை என்ற ஜனநாயக விரோத அணுகுமுறையை இந்த  அரசு பின்பற்றுகிறது. மக்கள் மிக விரைவில் இந்த உண்மையைப் புரிந்து கொள்வார்கள். தேச விரோத, மக்கள் விரோத, ஜனநாயக விரோத இந்த ஆட்சி யாளர்களை எதிர்த்து இடது சாரிக் கட்சிகள் நாடாளுமன் றத்துக்கு உள்ளேயும் போராடுகி றோம், மக்கள் மத்தியிலும் தெரி விக்கிறோம். இந்த விபரீத ஆட்சி யாளர்களின் மோசமான ஆட் சிக்கு எதிராக இடதுசாரி ஜன நாயக சக்திகள், அனைத்து மதச் சார்பற்ற சக்திகள் ஒன்றுபட்டுப் போராட வேண்டும். இவ்வாறு கே.சுப்பராயன் எம்.பி. கூறி னார். இந்த சந்திப்பின்போது, சிபிஐ மாநிலக்குழு உறுப்பினர் ஜிகாளியப்பன். மாவட்டச் செய லாளர் எம்.ரவி மற்றும் நிர்வாகி கள் எம்.கே.எம்.பாலசுப்பிரம ணியம், காட்டே ராமசாமி, பி.ஆர்.நடராஜன், எஸ்.ரவிச்சந் திரன் உள்ளிட்டோர் உடனி ருந்தனர்.