tamilnadu

குடிநீர் பிரச்சினையை தீர்ப்பதற்கு ஒன்றிணைந்து செயல்படுவோம்

சேலம், ஜூன் 30-  சேலம் ஐந்து ரோடு பகுதியில் உள்ள தனியார் பொறி யியல் கல்லூரியில் பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு 1317 மாணவ மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கிய அகில இந்திய தொழில்நுட்ப கல்வி இயக்கத்தின் பேராசிரியர் அனில் டி சஹஸ்ராபுதே, உலகம் முழுவதும் தண்ணீர் பிரச்சினை உள்ளது. இதில் தமிழ்நாடு மட்டும் விதிவிலக்கல்ல. தற்போது உள்ள தண்ணீர் பிரச்சனையைத் தீர்ப்பதற்கு நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். குடிநீர் பிரச்சி னையை உருவாக்குவது நாம் தான். அதை தீர்ப்பதும் நம் கையில் தான் உள்ளது என்றார்.