tamilnadu

img

ஊரடங்கிலும் மனிதாபிமானமற்று கட்டண கொள்கையில் ஈடுபடும் தனியார் கல்விநிலையங்கள் இந்திய மாணவர் சங்கத்தினர் மாவட்ட ஆட்சியரிடம் மனு

 கோவை, ஜூன் 5 -  கல்வி நிலையங்கள் திறப்பதற்கு முன்னரே தனியார் கல்வி நிறுவ னங்கள் கட்டண கொள்ளையில் ஈடுபடுகின்றன. ஊரடங்கிலும் மனி தாபிமானமற்று நடைபெறும் இந்த கட்டண கொள்ளையை தடுத்து நிறுத்த தமிழக அரசு உத்தரவிட வேண்டும் என இந்திய மாணவர் சங்கத்தின் சார்பில் மாநிலம் முழுவ தும் மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுக்கும் இயக்கம் வெள்ளியன்று நடைபெற்றது. ஊரடங்கு பிரச்சினை முடிவதற் குள் தனியார் பள்ளிகளில் வசூ லிக்கப்படும் அநியாய கல்வி கட் டணங்களை தடுத்து நிறுத்த வேண்டும்.  இணையதள வசதி மாண வர்களுக்கு முழுமையாக கிடைக்கப் பெற்ற பிறகே, இணைய வழியில் பாடம் நடத்துவது குறித்து பரிசீ லிக்க வேண்டும். பள்ளிகள் திறப் பது மற்றும் கற்றல், கற்பித்தல் குறித் தான தமிழக அரசின் ஆய்வுக்்குழுவில் மாணவர்கள், கல்வியாளர்கள் மற்றும் மாணவர் அமைப்பு பிரதிநிதிகளை இணைத்திட வேண்டும். அரசுக்கல் லூரிகளில் சுழற்சி முறை(Shift) ரத்து செய்யும் முடிவை திரும்பப் பெற வேண்டும். உள்ளிட்ட கோரிக் கைகளை வலியுறுத்தி கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இந்திய மாணவர் சங்கத்தின் மாநில செயலாளர் வீ.மாரியப்பன் தலைமையில், மாவட்ட தலைவர் அசார், செயலாளர் தினேஷ்ராஜா உள்ளிட்ட நிர்வாகிகள் மாவட்ட வருவாய்த்துறை அலுவலரிடம் மனு அளித்தனர்.

இதனைத்தொடர்ந்து செய்தியா ளர்களிடம் பேசிய மாணவர் சங்க மாநில செயலாளர் வீ.மாரி யப்பன் கூறுகையில், ஊரடங்கை பயன்படுத்தி மத்திய மாநில அரசு கள் தேசிய கல்வி கொள்கையை அமல்படுத்து வருகிறது. இந்த செயலை வன்மையாக கண் டிக்கிறோம். கல்வி நிலையங்கள் திறப்பதற்கு முன்னரே தனியார் கல்வி நிலையங்கள் தற்போது கட்டண கொள்கையை அரங்கேற்றி வருகின்றனர். இதனை உடடினயாக தமிழக அரசு தடுத்து நிறுத்த வேண் டும். இந்த ஊரடங்கு காரணமாக வேலை வருவாயின்றி மக்கள் தவித்து வருகின்றனர். ஆனால் இதுகுறித்து எந்த கவலையும் கொள்ளாத தனி யார் கல்வி நிறுவனங்கள் கல்விக் கட்டணத்தை வசூல் செய்வதில் குறி யாக உள்ளது. ஆகவே தமிழக அரசு தற்போதைய  சூழலை கணக்கில் கொண்டு கல்வி நிலையங்கள் திறந்த பின்னர். மூன்று மாதங்களுக்கு பிறகே கல்வி கட்டணத்தை வசூல் செய்யவேண்டும். இதற்கான அரசா னையை உடனடியாக பிறப்பிக்க வேண்டும்.   இதேபோல் தமிழக அரசு கல்வி நிலையங்கள் திறப்பது குறித்து வல்லுனர் குழுவை அமைத்துள்ளது. இதில் ஆசிரியர்கள், மாணவர் அமைப் புகளின் நிர்வாகிகள், கல்வியாளர் களை இணைக்க வேண்டும். இதே போன்று ஆன்லைன் வகுப்புகள் நடை பெறுகிறது. பெரும்பாலான மாண வர்களுக்கு இணைய வசதிகள் இல்லை என்பது மட்டுமல்ல பல கிராமங்களில் மின்சார வசதிளே இல்லாத சூழலில் ஆன்லைன் வகுப் புகள் நடத்துவது என்பது ஏழை, எளிய மாணவர்களை வஞ்சிக்கும் செயலாகும். அனைவருக்கும் இணைய வசதிகளை செய்து கொடுத்த பின்னரே ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்பட வேண்டும். கல்வி சந் தையாக மாற்றப்பட்ட பிறகு ஏழை, எளிய மாணவர்கள் தங்களின் கல்வி கட்டணத்தை செலுத்த பகுதி நேர பணிசெய்து அதன்மூலம் கிடைக் கும் வருவயை கட்டணமாக செலுத்தி கல்வி கற்று வருகிறார் கள். இதற்கு சுழற்சி முறையில் பயன் படுத்தும் முறை பயன்பட்டது. தற்போது இதனை ரத்து செய்வதால் அதிகப்படியான மாணவர்கள் பாதிக் கப்படுவார்கள். ஆகவே தமிழக அரசு சுழற்சிமுறையை ரத்து செய்வதை கைவிட வேண்டும். மேற்கண்ட கோரிக்கைகள் மாணவர்களின் நலனை முன்னிறுத்தி தற்போது மாநிலம் முழுவதுமுள்ள மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுக்கும் இயக்கத்தை மேற்கொண்டிருக்கி றோம். தமிழக அரசு மாணவர்களின் நலனுக்கு எதிராக செயல்பட்டால் ஊரடங்கிலும் தெருவில் இறங்கி போராட்டத்தில் ஈடுபடுவோம் என எச்சரித்தார்.

சேலம்

சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மனு கொடுக்கும் இயக்கத்தில் இந்திய மாணவர் சங்கத்தின் மாநிலத் தலை வர் ஏ.டி.கண்ணன், மாவட்ட செயலா ளர் ஆர்.கவின்ராஜ் மற்றும் மாவட் டக்குழு உறுப்பினர்கள் பங்கேற் றனர்.

திருப்பூர்

திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மனு கொடுக்கும் இயக்கத்தில் இந்திய மாணவர் சங்கத்தின் மாநில துணைத் தலைவர் நிருபன் சக்கரவர்த்தி, மாவட்ட செயலாளர் சம்சீர் அகமது, மாவட்டக்குழு உறுப்பினர்கள் உட் பட ஏராளமானோர் கலந்து கொண்டு மனு அளித்தனர்.  

ஈரோடு

ஈரோட்டில் மாணவர் சங்கத்தின் மாவட்ட தலைவர் மா.வினிஷா, மாவட்ட துணைத்தலைவர் சே. நவீன் குமார், மாவட்டக்குழு உறுப்பினர்கள் ஆகியோர் கலந்து கொண்டு மனு அளித்தனர்.

;