அரூர் சார் ஆட்சியர் அறிவுறுத்தல்
தருமபுரி, அக்.18- வடகிழக்கு பருவமழையால் ஏற்படும் இடர்ப்பாடு களை சமாளிக்கும் வகையில் அரசு அதிகாரிகள் தயார் நிலையில் இருக்க வேண்டும் என அரூர் சார் ஆட்சியர் மு. பிரதாப் தெரிவித்துள்ளார். அரூரில் வருவாய் கோட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் வடகிழக்கு பருவ மழையால் ஏற்படும் பாதிப்புகள், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் சார் ஆட்சியர் மு.பிரதாப் தலைமையில் நடைபெற்றது. இந்த ஆலோ சனைக் கூட்டத்தில் சார் ஆட்சியர் மு.பிரதாப் பேசியதாவது, தருமபுரி மாவட்டத்தில் வடகிழக்கு பருவ மழை துவங்கியுள்ளது. இந்த மழைநீரை ஏரிகள், குளம், குட்டைகள் உள்ளிட்ட நீர்நிலைகளை சேமிக்க வேண்டும். அரூர் மற்றும் பாப்பிரெட்டிப்பட்டி வரு வாய் வட்டத்துக்கு உள்பட்ட அனைத்துத்துறை அரசு அதிகாரிகள் இணைந்து ஒரு வாட்ஸ் ஆப் குழுவை (கட்செவி அஞ்சல்) ஏற்படுத்த வேண்டும். இக்குழுவில் தங்கள் துறை சார்ந்த விவரங்களை உடனுக்குடன் பதிவேற்றம் செய்வதுடன், மக்களுக்கான நடவடிக் கைகளை விரைந்து எடுக்க வேண்டும். தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பாதிப்புகளில் சென்னைக்கு அடுத்தபடியாக தருமபுரி மாவட்டத்தில் தான் அதிகளவில் பாதிப்புகள் இருப்பதாக புள்ளி விவ ரங்கள் தெரிவிக்கிறது. எனவே, டெங்கு பாதிப்புகள் ஏற்படாதவாறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை விரைந்து எடுக்க வேண்டும். கால்நடைகளுக்கு கோமாரி நோய்கள் வராமல் தடுக்கும் நோக்கில் தடுப் பூசிகள் போட வேண்டும். வடகிழக்கு பருவமழையால் பாதிக்கப்படும் மக்களுக்கு உதவிடும் வகையில் தேவை யான உணவுப் பொருள்களை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். அரசு மற்றும் தனியார் பள்ளி களில் கட்டிடங்களின் உறுதித் தன்மைகளை பள்ளியின் தலைமை ஆசிரியர்கள், கல்வித்துறை அதிகாரிகள் ஆய்வு செய்ய வேண்டும். பாதுகாப்பற்ற வகையில் கட்டிடங்கள் இருந்தால் அது குறித்த அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும் என்றார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் வட்டாட்சியர்கள் செல்வகுமார், இளஞ்செழியன், மோட்டார் வாகன ஆய்வாளர் கா.பன்னீர்செல்வம், வட்டார வளர்ச்சி அலுவலர் ரவிச்சந்திரன், செயல் அலுவலர் கே.சேகர் உள்ளிட்ட பல்வேறு அரசுத்துறை அதிகாரிகள் கலந்து கொண்டன.