tamilnadu

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கு சிபிஐ -யிடம் ஒப்படைப்பு

கோவை, ஏப். 29-பொள்ளாச்சியில் பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட சம்பவம் குறித்த வழக்கு சிபிஐயிடம் ஒப்படைக்கப்பட்ட நிலையில், இந்த வழக்கின் ஆவணங்களை சிபிசிஐடி காவல்துறையினர் திங்களன்று சமர்ப்பித்தனர். பொள்ளாச்சியில் பெண்களைஆபாச விடியோ எடுத்து அவர்களிடம் பணம் பறித்தும், பாலியல் வன்கொடுமைக்குள்ளாக்கிய சம்பவம் தமிழகத்தையே உலுக்கியது. இது தொடர்பாக பொள்ளாச்சியைச் சேர்ந்த திருநாவுக்கரசு, சபரிராஜன், சதீஷ், வசந்தகுமார் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கில் அரசியல் தலைவர்களின் வாரிசுகளுக்கும் தொடர்பிருப்பதாக எழுந்த புகாரையடுத்து, கடந்த மார்ச் மாதம் 16-ம் தேதி இந்தவழக்கு சிபிசிஐயிடம் இருந்து சிபிஐக்கு மாற்றப்பட்டது. இருப்பினும், இந்த வழக்கை சிபிசிஐடி காவல்துறையினரே தொடர்ந்து விசாரித்து வந்தனர். சிபிசிஐடி தென் மண்டல காவல் கண்காணிப்பாளர் நிஷா பார்த்திபன், தலைமையில் இவ்வழக்கில் புலன் விசாரணை மேற்கொண்டு, 40 சாட்சியங்களை விசாரித்தனர். மேலும், அவர்களின் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டு, வழக்கில் தொடர்புடைய அனைத்துஆவணங்களும் மற்றும் வழக்கு சொத்துக்களும் கைப்பற்றப்பட்டு, தமிழ்நாடு தடய அறிவியல் பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டன. இதனிடையே, புகார் கொடுத்த மாணவியின் சகோதரரைத் தாக்கியதாக “பார்’ நாகராஜ், பாபு, செந்தில், வசந்த் ஆகியோர் மீது காவல்துறையினர் அடிதடி வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். இதில், பார் நாகராஜை தவிர மற்றவர்கள் சிறையில் உள்ளனர். இதைத்தொடர்ந்து, அடிதடி வழக்கில் சரணடைந்த மணிவண்ணன் என்பவர் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில், குற்றவாளிகள் மீதுபாலியல் பலாத்கார வழக்கும் கூடுதலாக சேர்க்கப்பட்டது. இந்த சூழலில், பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில்சிபிஐ கடந்த ஏப்.27ம் தேதி முதல்விசாரணையைத் தொடங்கியது.இந்த நிலையில், இந்த பாலியல்வழக்கில் சம்பந்தப்பட்ட அனைத்து ஆவணங்களும் சிபிஐயிடம் திங்களன்று ஒப்படைக்கப்பட்டது.

;