பொள்ளாச்சி ,செப். 15- பொள்ளாச்சியை அடுத்த மாக்கினாம்பட்டியில் சுயேட்சை வார்டு உறுப்பினர்களுக்கும் அங்கீகாரம் வழங்க வேண்டுமென பாதிக்கப்பட்ட வார்டு உறுப்பினர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். கோவை மாவட்டம், பொள்ளாச்சி தெற்கு ஊராட்சி ஒன்றியத்திற்குக்குட்பட்டது, மாக்கினாம்பட்டி ஊராட்சி. இதில் கடந்த உள்ளாட்சி தேர்தலில் அதிமுகவைச் சேர்ந்த மாரியம்மாள் அழகிரிராஜ் என்பவர் மாக்கினாம்பட்டி ஊராட்சி மன்ற தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர், இதேதேர்தலில் சுயேட்சையாக வெற்றிபெற்ற ஈஸ்வரி, சோபியா, விஜயலட்சுமி உள்ளிட்ட மூன்று வார்டு உறுப்பி னர்களுக்கு அங்கீகாரம் வழங்காமல், பாரபட்சமாக நடந்து கொள்வதாக தெரிகிறது.
இதனால் ஆவேசமடைந்த மூன்று வார்டு உறுப்பி னர்கள், ஊராட்சிமன்றத் தலைவரின் இந்த பாரபட்சத் தைக் கண்டித்தும், அனைத்து வார்டுகளை போன்றே எங்க ளது வார்டுகளிலும் முறையான சுகாதார பணிகள் மேற் கொள்ளப்பட வேண்டும். சுயேட்சை வார்டு உறுப்பி னர்களுக்கு முறையான அங்கீகாரம் வழங்க வேண்டும் என தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த பொள்ளாச்சி தெற்கு ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் சதீஸ் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். இதில் சுமூக தீர்வு எட்டப்பட்ட நிலையில் அனைவரும் கலைந்து சென்றனர்.