tamilnadu

பொள்ளாச்சி ,ஈரோடு முக்கிய செய்திகள்

பொள்ளாச்சி அருகே குழந்தையை கொன்று  தாய் தீக்குளிப்பு  

பொள்ளாச்சி, ஆக.22- பொள்ளாச்சி அடுத்த சுப்பேகவுண்டன்புதூர் கிராமத்தில் குடும்பத் தகராறில் ஒரு வயது மகளை கொன்று தாயும் தீக்குளித்து பரிதாபமாக உயிரிழந்த இச்சம்பவம் இப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோவை மாவட்டம், பொள்ளாச்சி அருகே உள்ள சுப்பே  கவுண்டன் புதூர் கிராமத்தைச் சேர்ந்த ஈஸ்வர சாமி என்கின்ற சதீஷ். இவர் தேங்காய் உரிக்கும் தொழிலாளி. இவரது மனைவி மாலதி இவர்களுக்கு சசிகுமார் என்ற 7 வயது மகனும், மகா ஸ்ரீ என்ற ஒரு வயது மகளும் உள்ளனர். இந்நிலையில் சதீஷ் தினமும் மது அருந்திவிட்டு வருவதால் கணவன் மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் புதனன்று காலையில் சதீஷ் தனது மனைவியுடன் தகராறு செய்து விட்டு வேலைக்குச் சென்று விட்டதாக கூறப்படுகிறது.இதனால் மனமுடைந்த மாலதி குழந்தை மகாஸ்ரீ மீதும், தன் மீது மண்ணெண்ணயை ஊற்றி தீ பற்ற வைத்துக் கொண்டார். இவர்களின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கம் உள்ளவர்கள் கதவை உடைத்து சென்று பார்த்தபோது இருவரும் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர். பின்னர், அப்பகுதி மக்கள் காவல் துறையினருக்கு தகவல் கொடுத்ததை அடுத்து அங்கு விரைந்த ஆனை மலை தாலுகா காவல் துறையினர் தற்கொலை செய்துகொண்ட இருவரின் உடலை மீட்டு பிரேத  பரிசோதனைக்காக பொள்ளாச்சி  அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து கணவர் சதீஸ்சிடம் ஆனைமலை காவல் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.  குடும்பத் தகராறில் குழந்தை மீது மண்ணெண்ணையை ஊற்றி தாயும் குழைந்தையும்  உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சான்று பெற்ற நெல் விதைகளை பயன்படுத்த வேளாண்மைத் துறை அறிவுறுத்தல்

ஈரோடு, ஆக.22- விவசாயிகள் சான்று பெற்ற நெல் விதைகளை வாங்கிப் பயன்படுத்த வேண்டும் என வேளாண்மைத் துறை அறிவுறுத்தியுள்ளது. இதுகுறித்து விதை ஆய்வு துணை இயக்குநர் மு.வெங்கடாசலம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது, பவானிசாகர் அணையில் இருந்து கொடிவேரி பாசனங்களான தடப்பள்ளி - அரக்கன்கோட்டை கால்வாய், காளிங்கராயன் பாசன கால்வாய்க்கும், நஞ்சை பாசனத்துக்கும் நீர் திறக்கப்பட்டுள்ளது. விவசாயிகள் விதைப்புக்குத் தேவையான நெல் விதைகள், அரசு கூட்டுறவு, தனியார் விதை விற்பனை நிலையங்களில் போது மான அளவு இருப்பு வைக்கப்பட்டுள்ளது. எனவே, விவசாயிகள் தரமான நெல் விதைகளை வாங்கி விதைக்க வேண்டும். மேலும், விவசாயிகள் தங்களுக்குத் தேவையான நெல் விதைகளை உரிமம் பெற்ற அரசு கூட்டுறவு, தனியார் விதை விற்பனை நிலையங்களில் இருந்து வாங்கும்போது தரமான நெல் விதைகளைப் பெற முடியும். அரசு சான்று பெற்ற வெள்ளை அட்டை கொண்ட ஆதார நிலை விதைகள், நீல நிற அட்டை கொண்ட சான்று நிலை விதைகள் ஆகியவற்றை மட்டும் வாங்கி விதைத்துப் பயனடையலாம். விதை விற்பனை நிலையத்தில் இருந்து விதைகள் வாங்கும்போது தவறாமல் விதைக்கான ரசீதையும் கேட்டுப் பெற வேண்டும். அதில் விதையின் ரகம், குவி யல் எண், காலாவதி நாள், விலை, அந்த கடையின் விதை விற்பனை உரிமம் எண் ஆகியவை குறிப்பிடப் பட்டு இருக்க வேண்டும்.  இவ்வாறு வாங்கிய  விதைகளை அசோஸ்பைரில்லம், பாஸ்போபாக் டீரியா உயிர் உரங்களுடன் விதை நேர்த்தி செய்து விதைப்பதன் மூலம் நல்ல வாளிப்பான நாற்றுகளைப் பெற முடியும் என தெரிவித்துள்ளர்.

ஆக.25க்குள் குடும்ப அட்டையில் ஆதார் எண் இணைத்திடுக நீலகிரி மாவட்ட ஆட்சியர்

உதகை, ஆக.22- நீலகிரி மாவட்டத்தில் இதுவரை குடும்ப அட்டை களில் ஆதார் எண், அலைபேசி எண்களை இணைக் காதவர்கள் ஆகஸ்ட் 25 ஆம் தேதிக்குள் இணைத்துக் கொள்ள வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் தெரி வித்துள்ளர். இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி யிருப்பதாவது, நீலகிரி மாவட்டத்தில் பொது விநி யோகத் திட்டத்தின்கீழ் செயல்பட்டுவரும் 407 நியாய விலைக் கடைகளில் இணைக்கப்பட்டுள்ள 2,12,610 குடும்பங்களுக்கு ஏற்கெனவே மின்னணு குடும்ப அட்டை வழங்கப்பட்டுள்ளது. இதன்மூலம் 6,52,526 நபர்கள் அத்தியாவசியப் பொருள்களைப் பெற்று பயனடைந்து வருகின்றனர். மொத்தமுள்ள 6,52,526 நபர்களில் 6, 42,909 நபர்களின் மின்னணு குடும்ப அட்டையுடன் ஆதார் எண் இணைக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 9,617 நபர்களின் ஆதார் எண் அந்தந்த மின்னணு குடும்ப அட்டையுடன் இணைக்கப்பட வேண்டியுள்ளது. இதில் 5 வயதுக்கு உள்பட்ட குழந்தைகளும் அடங்குவர். இதேபோல், மொத்தமுள்ள 2,12,610 குடும்ப அட்டைதாரர்களில் 2,09, 432 மின்னணு குடும்ப அட்டைகளில் மட்டுமே அலைபேசி எண்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. மீதமுள்ள 3,178 குடும்ப அட்டைகளுக்கு அலைபேசி எண்கள் பதிவு செய்ய வேண்டியுள்ளது. ஆதார் எண், அலைபேசி எண்களைப் பதிவு செய்ய வேண்டிய நிலுவையிலுள்ள குடும்ப அட்டைகளின் பட்டியல் சம்பந்தப்பட்ட நியாயவிலைக் கடை களிலும், வட்ட வழங்கல் அலுவலகங்களிலும் விளம்பரப்படுத்தப்பட்டுள்ளது. தற்போது 5 வயதுக்கு உள்பட்ட குழந்தைகளுக்கும், அந்தந்த இ-சேவை மையங்களில் ஆதார் பதிவு செய்வதற்கு அரசால் வழிவகை செய்யப்பட்டுள்ளது. ஆதார் எண் மற்றும் அலைபேசி எண்களை இணைக்காமல் விடுபட்ட குடும்ப அட்டைதாரர்கள் அனைவரும் இவ்வாய்ப்பைப் பயன்படுத்திக்கொண்டு, ஆகஸ்ட் 25 ஆம் தேதிக்குள் விடுபட்ட ஆதார் எண்  மற்றும் அலைபேசி எண்களை இணைத்துக் கொள்ள வேண்டும். தவறினால் அவர்களது குடும்ப அட்டைக் கான அத்தியாவசியப் பொருள் வழங்குவது தற் காலிகமாக நிறுத்தப்படும் என்று தெரிவித்துள்ளார்.