tamilnadu

திருப்பூரில் வாலிபர் சங்கத்தின் மாவட்ட தலைவர் மீது காவல்துறை தாக்குதல்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்

திருப்பூர், அக். 21- திருப்பூரில் கூட்ட நெரிசலை கட்டுப்படுத்த உதவிய இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின்  மாவட்ட தலைவர் மீது  தாக்குதல் நடத்திய காவல்துறையினருக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள் ளது.  திருப்பூர் மாநகராட்சிக்குட் பட்ட கே.வி.ஆர் நகர் பகுதியில் தனியார் நகை அடமான அமைந் துள்ளது. இந்த  நகை அடமான கடை கடந்த ஒரு வர காலமாக பூட்டப்பட்டுள்ளது.  இக்கடையில் தங்கள் நகைகளை அடமானம் வைத்துள்ள அப்பகுதி மக்கள் ஞாயிற்றுக்கிழமை பூட்டிய அடகு கடை முன்பு நகைகளை மீட்டு தர வேண்டுமென்று  தன்னெழுச் சியாக மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதை அறிந்த காவல்துறையினர் பொதுமக்கள் மத்தியில் பேச்சு வார்த்தை நடத்தி யுள்ளனர்.  இந்நிலையில் வட்டாட்சியர் முன்னிலையில் மாலை நேரத்தில் காவல்துறையினர் கடையினை திறந்துள்ளனர். இதை அறிந்த நூற்றுக்கணக்கான பொதுமக்கள் திரண்டுள்ளனர். காவல்துறை யினர் கூட்டமாக நின்ற பொது மக்களை வரிசைப்படுத்த முடி யாமல் திணறினர். இதைக் கண்ட இந்திய ஜனநாயக வாலிபர் சங் கத்தின் மாவட்டத் தலைவர் ஞான சேகர் பொதுமக்களை வரிசைப் படுத்தி நிற்க வைத்துள்ளார்.

 இதைப் பொறுத்துக்கொள்ள முடியாத காவல்துறையின் உதவி ஆய்வாளர் முத்துக்குமார்,  ஞானசேகரை அங்கிருந்து  தள்ளி விட்டுள்ளார். எதற்காக தள்ளி விடுகிறீர்கள், பொதுமக்களுக்கு உதவி செய்தது தவறா என கேட் டதையொட்டி மீண்டும் தள்ளி விட முயற்சித்துள்ளார். இந்த நிலையில் அங்கிருந்த காவலர் களை துணைக்கு வைத்துக் கொண்டு ஞானசேகரை நகைக் கடைக்குள் தள்ளி கதவை சாத்தி விட்டு கடுமையாகத் தாக்கி யுள்ளனர். இதன்பின்னர் காவல் நிலையத்திற்கு கொண்டு சென்று அங்கும் கடுமையாக பிளாஸ்டிக் பைப் கொண்டு தாக்கியது மட்டு மின்றி கட்சி மற்றும் அமைப்பு களை பற்றி அவதூறாக பேசியுள் ளார்.  இதைத் தொடர்ந்து வாலிபர் சங்கம் மற்றும் மார்க்சிஸ்ட் கட் சியின் நிர்வாகிகள் காவல்நிலை யம் சென்று ஆய்வாளர், உதவி ஆணையர் ஆகியோரிடம் பேச்சு வார்த்தை நடத்திய பின்னர் ஞான சேகர் விடுவிக்கப்பட்டார். மேலும் இந்நடவடிக்கை்கு வருத்தம் தெரிவிப்பதாக காவல் துறை அதிகாரிகள் தெரிவித்ததை யடுத்து ஞானசேகரனை மீட்டு தனியார் மருத்துவமனையில்  சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.

சிபிஎம் கண்டனம்

காவல் துறையினரின் இந்த நடவடிக்கைக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருப்பூர் மாவட்டக்குழுவின் சார்பில் கண் டனம் தெரிவித்து மாவட்ட செய லாளர் செ.முத்துக்கண்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் மாவட்ட தலைவரும், மார்க்சிஸ்ட் கட்சியின் திருப்பூர் மாவட்ட தெற்கு மாநகரக்குழு உறுப்பின ருமான ஞானசேகரனை தாக்கிய காவல் உதவி ஆய்வாளர் முத்துக் குமார் உள்ளிட்ட காவல் துறை யினர் மீது துறை ரீதியான நட வடிக்கை எடுக்க வேண்டும். மேலும் திருப்பூர் மாநகர  மத்திய காவல்நிலையத்திற்கு வரும் காவல் அதிகாரிகள் பொது மக்களை அச்சுறுத்தும் வகையில் தொடர்ந்து நடந்து வருகிறார்கள். எனவே புதியதாக வரும் காவல் துறை அதிகாரிகளுக்கு மனித உரிமைகள் குறித்தும், பொதுமக் களிடம் எவ்வாறு அணுகுவது என்பது குறித்து உரிய பயிற்சி களை வழங்கிட வேண்டும் என அறிக்கையில் கூறியுள்ளார்.
 

;