tamilnadu

பிளஸ்1 தேர்வு 97.67 சதவிகிதம் தேர்ச்சி கோவை மாநில அளவில் மூன்றாம் இடத்தை பிடித்தது

கோவை, மே 8-பிளஸ்1 தேர்வில் கோவை மாவட்டம் 97.67 சதவிகிதம் தேர்ச்சியடைந்து மாநில அளவில் மூன்றாவது இடத்தை பிடித்தது.கோவை மாவட்டத்தில் 33 ஆயிரத்து 627 பேர் பிளஸ் 1 தேர்வு எழுதினார்கள். இதில் மாணவர்கள் 14 ஆயிரத்து 879 பேரும், மாணவிகள் 18 ஆயிரத்து 748 பேரும் தேர்வெழுதினர். பிளஸ்-1 தேர்வு முடிவுகள் புதனன்று வெளியானது. இதில் கோவை மாவட்டம் 97.67 சதவிகிதம் தேர்ச்சி பெற்றுள்ளது. மொத்தம் 32 ஆயிரத்து 842 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில் மாணவர்கள் 14 ஆயிரத்து 375 பேரும், மாணவிகள் 18 ஆயிரத்து 467 பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவர்கள் 96.61 சதவிகிதமும், மாணவிகள் 98.50 சதவிகிதமும் தேர்ச்சி பெற்றுள்ளனர். இது கடந்த ஆண்டை விட 1.48 சதவிகிதம் அதிகமாகும். மாணவர்களை விட மாணவிகளே அதிகம் தேர்ச்சி பெற்றுள்ளனர். பிளஸ்-1 தேர்வில் மாநில அளவில் கோவை மாவட்டம் 3 வது இடம் பிடித்துள்ளது.

கோவை மாநகராட்சி பள்ளி

கோவை மாநகராட்சியின் கீழ் உள்ள 16 பள்ளிகளில் 94. 72 சதவிகிதம் மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். இது கடந்த ஆண்டு 88.61 ஆக இருந்தது. இந்த ஆண்டில் 6.11 சதவிகிதம் கூடுதல் தேர்ச்சியாகும். மொத்தம் 2,139 மாணவ, மாணவிகள் தேர்வு எழுதியதில், 2,026 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். அதேபோல், ராமகிருஷ்ணாபுரத்தில் உள்ள மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளி மட்டும் 100 சதவிகிதம் தேர்ச்சி பெற்றுள்ளது. 

;