tamilnadu

img

ஒப்பந்த ஊழியர்களை நிரந்தரப்படுத்துக

சேலம், செப்.6- மின்சார வாரியத்தில் பணியாற்றும் ஒப்பந்த ஊழியர்களை அடையாளம் கண்டு  நிரந்தரப்படுத்த வலியுறுத்தி சேலம் மற்றும் தருமபுரியில் சிஐடியு மின் ஊழியர் மத்திய அமைப்பின் சார்பில் வெள்ளியன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  தமிழ்நாடு மின்சார வாரியத்தில் எண்ணி லடங்கா தொழிலாளர்கள் ஒப்பந்த ஊழியர் களாக நீண்டகாலமாக பணியாற்றி வரு கின்றனர். அவர்களை அடையாளம் கண்டு  நிரந்தரப்படுத்த வேண்டும். மின்வாரி யத்தில் உள்ள அனைத்து பிரிவிலும் உள்ள காலிப்பணியிடங்கள் உடனடியாக நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும். ஊதிய உயர்வு வழங்குவதற்கு பேச்சுவார்த்தை நடத்த குழுவை அமைத்திட வேண்டும். கேங்மேன் என்ற பதவியை கள உதவி யாளர் என மாற்ற வேண்டும். ஒப்பந்தத்தின் அடிப்படையில் புதிய பதவிகளை அனு மதிக்கவேண்டும்  உள்ளிட்ட கோரிக்கை களை வலியுறுத்தி சிஐடியு மின் ஊழியர் மத்திய அமைப்பின் சார்பில் வெள்ளியன்று பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டம் நடை பெற்றது.   சேலம் மாநகரம், உடையாப்பட்டி பகுதியிலுள்ள மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட் டத்திற்கு சங்கத்தின் சேலம் மின்பகிர்மான வட்ட கிளைத் தலைவர் பி.கருப்பண்ணன் தலைமை தாங்கினார். மாநில துணை பொதுச்செயலாளர் வி.இளங்கோ, வட்ட கிளை செயலாளர் வி.ரகுபதி, பொருளாளர் பழனிசாமி உள்ளிட்ட திரளான மின் ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

தருமபுரி

தருமபுரி மேற்பார்வை அலுவலகம் முன்பு நடைபெற்ற கவன ஈர்ப்பு ஆர்ப்பாட் டத்திற்கு சிஐடியு மாவட்டத் தலைவர் ஜி. நாகராஜன், தருமபுரி கோட்ட செயலாளர் ஜி.சக்திவேல் ஆகியோர் தலைமை தாங்கி னார். மாநில துணைத் தலைவர் பி.ஜீவா, மாவட்ட துணைத் தலைவர் ஜி.பி.விஜியன்,  கோட்ட தலைவர்கள் எம்.சண்முகம், வி.சீனி வாசன், கே.குப்பன் மற்றும் கோட்டச் செய லாளர்கள் கே.ஜெகநாதன், எம்.காளி யப்பன், பி.சி.முனியப்பன், ஆர்.கிருஷ்ண மூர்த்தி உள்ளிட்ட பலர் கலந்து கொண் டனர். 

;