tamilnadu

img

ஒப்பந்த ஊழியர்களுக்கு தினக்கூலி ரூ.380 வழங்கிடுக மின் ஊழியர் மத்திய அமைப்பு ஆர்ப்பாட்டம்

கோவை, பிப். 18- கோவையில் மின் ஊழியர் மத்திய அமைப்பின் சார்பில் செவ்வாயன்று கவன ஈர்ப்பு போராட்டம் நடைபெற்றது.  பல ஆண்டுகளாக மின் வாரியத்தின் நிரந்தர  ஊழியர்கள் செய்யும் பணியை செய்து கொண்டி ருக்கும் ஒப்பந்த ஊழியர்களை அடையாளம் கண்டு வாரியம் ஒத்துக் கொண்ட ரூ. 380 தினக்கூலி யாக வழங்கி, படிப்படியாக அவர்களை நிரந்தரப் படுத்திட வேண்டும் என்கிற கோரிக்கையை வலியு றுத்தி கோவை டாடாபாத் மின் வாரிய தலைமை அலுவலகம் முன்பு கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் செவ்வாயன்று நடைபெற்றது.  மேற்கண்ட கோரிக்கையை வலியுறுத்தி சென் னையில் தலைவர்கள் உண்ணாவிரதம் மேற் கொண்டு வருகிற நிலையில், அரசின் கவனத்தை ஈர்க்க கோவையில் இந்த ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சிஐடியு மின் ஊழியர் மத்திய அமைப்பின் கோவை வடக்கு நகர தலைவர்  சென்னியப்பன் தலைமை வகித்தார். இதில் சிஐடியு மாநிலக்குழு உறுப்பினர் எஸ்.ஆறு முகம் சிறப்புரையாற்றினார்.  தெற்கு தலைவர் காளி முத்து, மைய தலைவர் சாதிக்பாட்சா, ஒண்டிப்புதூர் கிளை செயலாளர் விவேகானந்தன், தெற்கு கோட்ட செயலாளர் பழனிச்சாமி உள்ளிட்ட திரளா னோர் கலந்து கொண்டனர்.

;