மின்சார வாரிய ஊழியர்கள் மறியல் - கைது
கோவை, அக்.10- ஒப்பந்த ஊழியர்களை பணி யில் அமர்த்தி தினக்கூலியாக ரூ.380 வழங்க வேண்டும் என வலி யுறுத்தி கோவையில் வியாழ னன்று சிஐடியு தலைமையில் மின்வாரிய ஊழியர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடு பட்டு கைதாகினர். மின்வாரியம் அறிவித்த படி ஒப் பந்த ஊழியர்களை பணியில் அமர்த்தி தினக்கூலியாக ரூ.380 வழங்க வேண்டும். 5 ஆயிரம் கேங்க்மேன் என்ற கள உதவியா ளர்களை 10 ஆயிரமாக உயர்த்த வேண்டும். தானே, வர்தா, காஜா புயல்களில் மின்வாரிய ஊழியர் களின் அர்ப்பணிப்பு மற்றும் உழைப்பை கண்டு மின்துறை அமைச்சர் அறிவித்த வாக்குறுதி களை நிறைவேற்ற வேண்டும். மின்வாரியத்தில் உள்ள 40 ஆயி ரம் காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும். வயது வரம்பு அடிப் படையில் ஒப்பந்த பணியாளர்க ளுக்கு முன்னுரிமை அளித்திட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலி யுறுத்தி சிஐடியு தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பின் சார் பில் மாநிலம் முழுவதும் மறியல் போராட்டத்திற்கு அறைகூவல் விடுத்திருந்தது. இதன் ஒருபகுதியாக கோவை டாடாபாத் பகுதியில் உள்ள மண் டல தலைமை பொறியாளர் அலு வலக நுழைவாயில் முன்பு மறியல் போராட்டம் நடைபெற்றது. சிஐ டியு மாவட்ட செயலாளர் எஸ்.கிருஷ்ணமூர்த்தி, மின் ஊழியர் மத்திய அமைப்பின் மண்டல செய லாளர் வி.மதுசூதனன் தலைமை யில் நடைபெற்ற இந்த மறியல் போரட்டாத்தில் ஐநூறுக்கும் மேற் பட்டோர் பங்கேற்றனர். இதனை யடுத்து இப்போராட்டத்திற்கு காவல்துறையினர் அனுமதி மறுத்து போராட்டத்தில் ஈடுபட்ட சங்க நிர்வாகிகள் கோபால கிருஷ்ணன், செபாஸ்டின், கிருஷ்ண குமார், மணிகண்டன், சண்முகம், சுகுமாரன் உள்ளிட்ட 14 பெண்கள் உள்பட 500க்கும் மேற்பட் டோரை கைது செய்தனர்.