tamilnadu

மே.14ல் கோவையில் துவக்கம்

கோவை, மே 11-16 வயதுக்குப்பட்டோருக்கான 36-வது தேசிய கூடைப்பந்து போட்டி கோவையில் வரும் 14-ம் தேதி துவங்குகிறது. இது குறித்து தமிழக கூடைப்பந்து சங்க செயலாளர் ஆதவ் அர்ஜுனன்கூறுகையில், இந்திய கூடைப்பந்து சம்மேளனம் நடத்தும் 16 வயதுக்குட்பட்டோருக்கான (ஆண்கள், பெண்கள்) 36-வது தேசிய அளவிலான கூடைப்பந்து போட்டி, கோவை பீளமேடு பகுதியிலுள்ள பி.எஸ்.ஜிதொழில்நுட்பக் கல்லூரி உள்விளையாட்டரங்கில் மே 14-ம் முதல் 21ம் தேதிவரை நடைபெறவுள்ளது. இப்போட்டிகளில் நாடு முழுவதிலும் இருந்து 25 மாநிலங்களைச் சேர்ந்த அணிகள் என 700 வீரர்கள் மற்றும் வீராங்கனைகள், 60 தேசிய நடுவர்கள் கலந்து கொள்கின்றனர். இப்போட்டிகளில் சிறப்பாக விளையாடும் வீரர்கள் மற்றும்வீராங்கனைகள் இந்திய கூடைப்பந்து அணிக்கு தேர்வு செய்யப்படுவர். கடந்த ஆண்டு ராஜஸ்தானில் நடைபெற்ற தேசிய கூடைப்பந்து போட்டியில் தமிழ்நாடு அணி வெண்கலப் பதக்கத்தை வென்றது. 1962-ம்ஆண்டிற்கு பிறகு கோவையில் தேசியபோட்டிகள் தற்போதுதான் நடத்தப்பட இருக்கிறது. 57 ஆண்டுகளுக்கு பிறகு தேசிய போட்டிகளை நடத்தும் வாய்ப்பை தேசிய கூடைப்பந்து சம்மேளனம் கோவைக்கு வழங்கியுள்ளது. இப்போட்டிகளுக்கு சிறப்பு ஏற்பாடாக வீரர்கள், வீராங்கனைகள் மற்றும்நடுவர்கள் தங்க இடம், உணவு வசதிகள் செய்யப்பட்டுள்ளதாக கூறினர்.“கோவை எப்போதுமே உயர்தரமானவிளையாட்டைக் கொடுக்கும். சென்னைக்கு அடுத்தபடியாக, அதிகளவிலான விளையாட்டு வீரர்கள்கோவையில் உருவாக்கப்படுகின்றனர். மாநிலத்தின் மற்ற மாவட்டங்களுக்கும், கிராமப்புற பகுதிகளுக்கும் விளையாட்டு போட்டியை எடுத்துச் செல்லும் வகையில், கோவையில் தற்போது இந்தப் போட்டி நடத்தப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

;