tamilnadu

ஒரு வகுப்பறைக்கு 10 மாணவர்கள் மட்டுமே தேர்வு எழுத அனுமதி

அமைச்சர் செங்கோட்டையன் தகவல்

கோபி, மே 16- பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுக்கு அந்தந்த பள்ளிகளிலேயே தேர்வு மையங் கள் அமைக்கப்பட்டுள்ளது. ஒரு வகுப்ப றைக்கு 10 மாணவர்கள் மட்டுமே தேர்வு எழுத அனுமதிக்கப்படுவார்கள். தனியார் பள்ளிக்கு அரசு ஆசிரியர்களும், அரசு பள்ளிக்கு தனியார் பள்ளி ஆசிரியர்களும் தேர்வு பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள் என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர்  கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்துள் ளார். ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபா ளையம் தனியார் திருமண மண்டபத்தில் மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு சிறப்பு  கடன் திட்ட விழாவில் தமிழக பள்ளிக்  கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட் டையன், சுற்றுச்சூழல்துறை அமைச்சர் கே.சி.கருப்பண்ணன் ஆகியோர் பங்கேற்று  75 மகளிர் சுயஉதவி குழுக்களுக்கு ரூ.46.85 லட்சம் மதிப்பிலான கடனுதவிகளை வழங்கினர். 

அதனைதொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சர்  கே.ஏ.செங்கோட்டையன் தெரிவிக்கை யில்: மாணவர்கள் படிக்கும் அனைத்து  உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிக ளிலேயே 10 வகுப்பு தேர்வு மையங்களாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது. ஒரு தேர்வு அறைக்கு 10 மாணவர்கள் மட்டுமே அமர  வைக்கப்படுவார்கள். பள்ளிக் கல்வித்து றையில் பணிபுரியும் அனைத்து ஆசிரியர்க ளும் தேர்வு பணியில் ஈடுபடுத்தப்ப டுவார்கள். இம்மாதம் 21 ஆம் தேதி முதல்  தேர்வு பணியாற்ற அறிவுறுத்தப்பட்டுள்ளது.

12 ஆயிரம் பள்ளிகள் தேர்வு மையங்க ளாக மாறுகின்றன. தனியார் பள்ளிகளில் உள்ள தேர்வு மையங்களில் அரசு பள்ளி  ஆசிரியர்களும், அரசு பள்ளி தேர்வு மையங்க ளில் தனியார் பள்ளி ஆசிரியர்களும் தேர்வு  கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்படு வார்கள்.  வெளியூரிலிருக்கும் தனியார் பள்ளி மாணவர்களை மூன்று நாட்களுக்கு முன்பே  அழைத்து வந்து தனியார் பள்ளி விடுதிக ளில் தங்கவைக்கப்பட்டு தேர்வு எழுதும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மாணவர்கள் தேர்வு மையங்களுக்கு வர  ”இ பாஸ்” வசதிபெற கடிதங்கள் அனுப்பப் பட்டுள்ளது. அதன் மூலம் மாணவர்கள் அழைத்துவரப்பட்டு தேர்வு எழுதும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சுகாதாரப்பணிகளும் முழுமையாக ஏற்பாடு  செய்யப்பட்டுள்ளது. தேர்வு  நுழைவுச்சீட்டு ஆன்லைன் மூலம் வழங்கப்பட்டு வருகி றது. மாணவர்களுக்கு தேவையான அடிப் படை வசதிகள் செய்யப்பட்டுள்ளது. மாவட்ட ஆட்சியர்கள் தேர்வு மையங்களை ஆய்வு செய்து கண்காணிக்க வேண்டும் என  உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.