tamilnadu

img

ஹெல்மெட் வாங்கினால் வெங்காயம் இலவசம்

சேலம், டிச.18- சேலத்தில் ஹெல்மெட் வாங்கினால் ஒரு கிலோ வெங்காயம் இலவசம் என  அறிவிக்கப்பட்டதால் வாடிக்கையாளர்கள் கூட்டம் அலைமோதியது.  நாடு முழுவதும் கடந்த  |சில வாரங்களாக வெங் காயத்தின் விலை அதி கரித்த வண்ணம் உள்ளது. இதனால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி  வரு கின்றனர். இந்நிலையில் சேலத்தில் ஹெல்மெட் வாங்கினால் வெங்காயம் இலவசம் என்ற  அறிவிப்பு வாடிக்கையாளர்களை கவர்ந் துள்ளது.  இதன் விவரம் வருமாறு, சேலம்  கோட்டை பகுதியில் முகமது காசிம் என் பவர் ஹெல்மெட் கடை வைத்துள்ளார். செவ்வாயன்று தனது கடையில் ஹெட்மெட்  வாங்கினால், ஒரு கிலோ பெரிய வெங் காயம் இலவசமாக வழங்கப்படுவதாக அறிவித்தார். இத்தகவல் பரவியதும், ஏராள மானோர் கடைக்கு சென்று ஹெல்மெட் வாங்கிச் சென்றனர்.  இதுகுறித்து கடை உரிமையாளர் கூறுகையில், இருசக்கர வாகனத்தில் செல்பவர்கள் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டுமென போலீசார் வலியு றுத்தி வருகின்றனர். சேலத்தில் 2 முக்கிய சாலைகளில், ஹெல்மெட் அணியாமல் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக ஹெல்மெட் விற்பனை அதிக ரித்துள்ளது. இந்த சூழ்நிலையில் வாடிக் கையாளர்களை கவர, இலவசமாக வெங் காயம் வழங்க முடிவு செய்து, விற்பனை செய்யப்படுகிறது. இந்த அறிவிப்பு நல்ல  வரவேற்பை பெற்றுள்ளது என தெரி வித்தார்.