கோவை, செப். 27– தொழிற்சாலைகளின் வரவு, செலவு தன்மைக்கேற்ப 25 சதவிகிதம் முதலீட்டு கடன் வழங்க வேண்டும் என கோவை சிறு, குறு தொழில் முனைவோர் சங்கத்தினர் வலியுறுத்தியுள்ளனர். தொழில் நகரமான கோவையில் குண்டூசி முதல் ராக்கெட்டுக்கு பொறுத்தப டும் உதிரி பாகங்கள் வரை தயாரிக்கப்படு கின்றன. வெட் கிரைண்டர், பம்ப்செட் மோட்டார்களுக்கு தனி சிறப்பு கொண்ட மாவட்டமாக கோவை உள்ளது. ஆட்டோ மொபைல்ஸ் துறையில், மோட்டார் சைக் கிள் முதல் கனரக வாகனங்கள் வரை தேவை யான உதிரிபாகங்கள் செய்வதில் கோவை மாவட்டம் சிறப்பு தன்மை உடையது. பிற மாவட்ட, மாநில மக்களுக்கு கோவை தொழில் துறையினர் வேலை வாய்ப்பு களை வழங்கி வருகின்றனர்.
கோவை மாவட்டத்தில் பல்வேறு துறையில் சுமார் 1.5 லட்சம் நிறுவனங்களில் 6 லட்சத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இதனிடையே, கடந்த 7 மாதங்களுக்கு மேலாக கொரோனா தொற்றால் ஏற்பட்ட பாதிப்பு காரணமாக 70 சதவிகிதத்துக்கு மேல் தொழில் நிறுவ னங்கள் உற்பத்தி இழந்து வங்கிகளில் வாங்கிய கடன்களை திருப்பி செலுத்த முடியாமல் தவித்து வருகின்றனர். ஜிஎஸ்டி, பணமதிப்பிழப்பு போன்ற மத்திய அரசின் சீர்குலைவு நடவடிக்கையின் காரணமாக ஏற்கனவே கடும் பாதிப்பில் இருந்த தொழில் கள் தற்போதைய ஊரடங்கால் கடும் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர். இத்தொ ழிலை மீட்டெடுப்பதற்கு பல்வேறு கோரிக் கைகளை தொழில் முனைவேர்கள் முன்வைத்துள்ளனர்.
இது குறித்து தமிழ்நாடு கைத்தொழில் மற்றும் குறுந்தொழில் முனைவோர்கள் சங்கத்தின் கோவை மாவட்டத் தலைவர் ஜேம்ஸ் கூறுகையில், குறுந்தொழில்க ளுக்கு குறைந்தபட்ச கடன் கூட கிடைக்கப் பெறாமல், இந்த காலகட்டத்தில் எண்ணற்ற இன்னல்களை சந்தித்து வருகிறார்கள். வாடகைக் கட்டிடங்களுக்கு ஆறு மாதமாக வாடகைக் கொடுக்க முடியாமலும், தங்கள் குடியிருக்கும் வீட்டுக்கு வாடகை கொடுக்க முடியாமலும், இப்படி ஏராளமான பிரச்ச னைகளை சந்தித்து வருகின்றனர். இந்த சூழ்நிலையில் இருந்து தொழில்களை பாது காக்க மத்திய, மாநில அரசுகள் கடன் பெற்ற தொழில் நிறுவனங்களுக்கு, ஆறு மாத காலத்திற்கு கடனை திருப்பி செலுத்த அவகாசம் தர வேண்டும். ஒவ்வொரு குறுந் தொழில் முனைவோர்களுக்கும் அவர்கள் வங்கிகளின் மூலம், ஆண்டு வரவு, செலவுத் தன்மைக்கு ஏற்ப 25 சதவிகிதம் முதலீட்டுக் கடனாக எவ்வித நிபந்தனையுமின்றி வழங்கிட மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றார்.
மேலும், இதுகுறித்து கோவை பம்ப்செட் மற்றும் உதிரிபாகங்கள் தயாரிப்பாளர் சங்க தலைவர் மணிராஜ் கூறுகையில், தொழில் துறையினர் வங்கிகளில் பெற்றுள்ள மூல தன கடனுக்கான வட்டியை அடுத்த ஆண்டு மார்ச் மாதம் வரை பிரித்து பிரித்து கட்டிக் கொள்ளலாம், என மத்திய அரசு கூறியுள் ளது. ஆனால், வங்கிகள் வங்கிக் கணக்கில் உள்ள பணத்தை வட்டியாக எடுத்து கொள்கி றார்கள். கடந்த 6 மாத காலமாக, பல தொழில் நிறுவனங்கள் இயங்காமல் வரவு, செலவு இல்லாமல் வங்கிகளில் பணம் செலுத்த முடியாத நிலையில் இருந்தனர். அதன் பின், கடன் பெற்று தொழிலை நடத்தலாம் என வங்கி கணக்குகளில் வரவு, செலவு கணக்குக் காக பணம் செலுத்தினார்கள். ஆனால், வங்கிகள் அதனை வட்டியாக எடுத்து கொண்டார்கள். இதனால் மீண்டும் தொழில்நிறுவனங்கள் முடங்கும் அபாயம் உள்ளது. பிடித்த வட்டித் தொகையை மீண்டும் கணக்கில் செலுத்த வேண்டும், என்றார்.