tamilnadu

img

கோவையில் என்ஐஏ அதிகாரிகள் திடீர் சோதனை

 கோவை, ஆக. 29- தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) அதிகாரி கள் வியாழனன்று கோவை மாநகரப் பகுதியில் திடீர் சோதனை மேற்கொண்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.  கோவையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு  தீவிரவாதிகள் ஊடுருவியுள்ளதாக மத்திய உளவுத் துறை அறிக்கையை தொடர்ந்து பாதுகாப்பு ஏற்பாடு கள் பலப்படுத்தப்பட்டது. இதனால் மாவட்டம் முழுவதும் ஒருவிதமான பதட்டமான சூழல் உருவா னது. இதனையடுத்து பாதுகாப்பு நடவடிக்கையை காவல்துறையினர் விலக்கி கொண்டனர். இந்நிலை யில், வியாழனன்று திடீரென தேசிய புலனாய்வு  முகமை அதிகாரிகள் மாநகர காவல் எல்லைக்குட் பட்ட வின்சென்ட் ரோடு, கோட்டை மேடு பகுதியில் இரண்டு வீடுகளிலும், உக்கடம் ஜி.எம். நகரில் இரண்டு வீடுகளிலும், பிலால் எஸ்டேட் பகுதியில் உள்ள ஒரு வீட்டிலும் சோதனை மேற்கொண்டனர். இந்த சோதனையடுத்து 5 பேரின் வீடுகளில் இருத்து 7 அரபு மொழி புத்தகங்கள், துண்டு பிரசுரங்கள், 7 செல்போன்களை அதிகாரிகள் எடுத்துச்சென்றனர்.  முன்னதாக, கோவை உக்கடம், கோட்டைமேடு பகுதியில் வசிக்கும் உமர் பரூக், சனாபர் அலி, சமேஷா முபீன், முகமது யாஷீர், சதாம் ஹூசேன் உள்ளிட்ட 5 நபர்கள் வீட்டில் தேசிய புலானய்வு அதிகாரிகள் காலை 5 மணியிலிருந்து சோதனையில் ஈடுபட்ட னர். ஐஎஸ்ஐஎஸ் அமைப்புடன் சமூக வலைதளத்தில் தொடர்புடையதாக கூறி ஏற்கனவே கடந்த ஜூன் மாதம் இதே பகுதியில் முகமது உசேன், ஷாஜகான், ஷேக் அப்துல்லா உள்ளிட்டவர்களின் வீடுகளில் சோதனை செய்த அதிகாரிகள், அவர்களை கோவை பந்தைய சாலையில் உள்ள என்ஐஏ அலுவலகத்தில் வைத்து விசாரணை செய்தனர். தற்போதும் அதே பகுதியில் 5 நபரிடம் சுமார் 5 மணி நேரம் அதிகாரி கள் விசாரணை மேற்கொண்டனர். மேலும் இந்த 5 பேரையும் வெள்ளியன்று (ஆக.30) கொச்சி தேசிய புலனாய்வு முகமை அலுவலகத்தில் ஆஜராக சம்மன் அளித்தனர்.

;