tamilnadu

நாமக்கல் ,சேலம் முக்கிய செய்திகள்

பள்ளி மாணவ, மாணவிகளின் கலாச்சார கலை விழா

சேலம், அக்.23- சேலத்தில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கான மாநில அளவிலான கலைவிழா புதனன்று நடை பெற்றது. சேலம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் இருந்து 42 பள்ளிகளை சேர்ந்த 1500க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்ற கலை விழா நடை பெற்றது. இதில் நடனம், கிராமிய பாடல்கள், ஒயி லாட்டம் மற்றும் கட்டுரைப் போட்டி, வினாடி-வினா மற்றும் பலகுரல் நிகழ்வு என பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சேலம் மாவட்ட கல்வி அதிகாரி கணேசமூர்த்தி உள்ளிட்ட அரசு அலுவ லர்கள் கலந்து கொண்டனர். 

திருமணிமுத்தாற்றில் மீண்டும் வெள்ளப்பெருக்கு தரைப்பாலம் உடைப்பால் கிராமங்கள் பாதிப்பு

நாமக்கல், அக்.23- ராசிபுரம் அருகே மதியம்பட்டி திருமணிமுத் தாற்றில் மீண்டும் ரசாயன நுரையுடன் செவ்வாயன்று வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அங்குள்ள தரைப் பாலம் உடைந்ததால் 5 கிராமங்களுக்கு போக்கு வரத்துப் பாதிக்கப்பட்டது. நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் அருகே மதியம் பட்டி பகுதியில் திருமணிமுத்தாறு ஓடுகிறது. சேலம்  மாவட்டம், ஏற்காடு மலை அடிவாரத்தில் உற்பத்தி யாகும் திருமணிமுத்தாறு சேலம் மாவட்டத்தின் பல் வேறு பகுதியில் வழியாக பாய்ந்து நாமக்கல் மாவட் டத்தில் உள்ள முக்கிய கிராமங்கள் வழியாகச் சென்று  நன்செய் இடையாறு அருகே காவிரி ஆற்றில் கலக் கிறது. இந்நிலையில் சேலம் சுற்று வட்டாரங்களில் திங்க ளன்று பெய்த கன மழை காரணமாக திருமணிமுத் தாற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. ஆற்றில்  அடிக்கடி வெள்ளப்பெருக்கு ஏற்படுவதால், மதியம் பட்டி-செளரிபாளையம் இடையே உயா்மட்ட பாலம் அமைக்கும் பணி தடைபடுகிறது. அதனையொட்டி தற்காலிக பாலம் அமைக்கப்பட்டு வரும் நிலையில்,  திடீரென ஏற்படும் வெள்ளப்பெருக்கால் செவ்வா யன்று காலை மதியம்பட்டி- சௌரிபாளையம் இடையே அமைக்கப்பட்டிருந்த தரைப்பாலம் நீரில் அடித்துச் செல்லப்பட்டது. இதனால் மதியம்பட்டி, சௌரிபாளையம், கல் கட்டனூா், பொரசபாளையம், மல்லசமுத்திரம் உள்ளிட்ட 5 க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கான போக்குவரத்து துண்டிக்கப் பட்டுள்ளது. இதனால் காலை பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ, மாண வியரும் பணிக்குச் செல்பவா்களும் குறிப்பிட்ட நேரத்தில் செல்ல முடியாமல் 15 கிலோ மீட்டா் தூரம் சுற்றி கொண்டு செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது. மேலும், இதுபோன்று அடிக்கடி நடைபெறுவதால் அதிகாரிகள் தலையிட்டு பணியை விரைந்து முடித்திட  வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தீபாவளி பண்டிகைக்கு  சிறப்பு பேருந்துகள் இயக்கம்

சேலம், அக்.23- தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தின் சேலம் கோட்டம் சார்பில், சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. இதுகுறித்து தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக  சேலம் கோட்ட மேலாண்மை இயக்குநா் (பொ) அன்பு  ஆப்ரஹாம் தெரிவித்ததாவது, தீபாவளி பண்டி கையை முன்னிட்டு (அக்.27) தமிழ்நாடு அரசு போக்கு வரத்துக் கழகம், சேலம் மூலமாக சென்னையிலிருந்து  சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி,ஒசூா், நாமக்கல் லுக்கும், பெங்களூரிலிருந்து சேலம், திருச்சி,  மதுரை, குமுளி, திருவண்ணாமலை, தருமபுரி,  கிருஷ்ணகிரி, ஒசூருக்கும், சேலத்திலிருந்து மதுரை,  கோவை, திருச்சி, சிதம்பரம், திருப்பூா், கடலூா்,  பெங்களூரு, திருவண்ணாமலை மற்றும் வேலூா்  ஆகிய வழித்தடங்களுக்கும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. சேலம், நாமக்கல், தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் இருந்து அனைத்து முக்கிய நகரங்களுக்கு சிறப்பு பேருந்துகள் கூடுதலாகவும் மற்றும் கூடுதல் நடைகளும் இயக்கப்பட உள்ளன. மேற்கண்ட மாவட்டங்களின் நகரப் பகுதிகளில் அனைத்து நேரங்களிலும் பயணிகள் தேவைக்கேற்ப கூடுதல் நகரப் பேருந்து வசதிகள் ஏற்பாடு செய்யப் பட்டுள்ளன. மேலும், அக். 24 முதல் அக். 29 வரை பயணி கள் கூட்டத்துக்கேற்ப இரவு முழுவதும் நகரப் பேருந்து கள் இயக்கப்படும். இந்த சிறப்பு பேருந்துகளை  பயன்படுத்தி, பயணிகள் அனைவரும் நெரிசலைத்  தவிர்த்து, இனிய பயணம் மேற்கொள்ளலாம் என தெரிவித்துள்ளார்.

இனிப்பு, காரம் தயாரிப்பு மற்றும் விற்பனையாளர்களுக்கு விழிப்புணர்வு கூட்டம் 

நாமக்கல், அக்.23- தீபாவளி பண்டிகை கால இனிப்பு மற்றும் காரம் தயாரிப்பு மற்றும் விற்பனை யாளர்களின் விழிப்புணர்வு கூட்டம் செவ் வாயன்று நடைபெற்றது.  தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, மக்களின் அன்றாட தேவைகளில் அவசிய மானதாக விளங்கும் விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது. உணவுப் பொருட்களின் தரம் மற்றும் பாது காப்பினை உறுதி செய்திட செவ்வாயன்று மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் மாவட்டம் உணவு பாது காப்பு துறை நியமன அலுவலர் மரு.கே.சி. அருண் தலைமையில் அனைத்து இனிப்பு  மற்றும் காரம் உற்பத்தி செய்யும் தயாரிப் பாளர்கள், விற்பனையாளர்கள் கலந்து கொண்டனர். தற்போது தீபாவளி பண்டிகை காலம்  என்பதால் விதவிதமான இனிப்பு பல காரங்கள் காரங்கள் மற்றும் கேக் போன்ற பேக்கரி உணவு பொருட்களை மக்கள் விரும்பி வாங்குவார்கள். இதையொட்டி தீபாவளி பண்டிகையில் இனிப்பு மற்றும்  கார தின்பண்டங்களை சீட்டு நடத்து பவர்கள் தயாரிப்பவர்கள் மற்றும் விற்ப னையாளர்கள் உணவுப் பாதுகாப்புத் துறையில் பதிவு செய்து உரிமம் பெற்று  பொது மக்களுக்கு விநியோகம் செய்வது  கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மேலும் இனிப்பு மற்றும் பேக்கரி பொருட்கள் தயாரிப்பாளர்கள் தரமான மூலப்பொருட் களைக் கொண்டு சுகாதாரமானதாகவும்,   அனுமதிக்கப்பட்ட அளவு நிறமிகள், தர மான நெய் மற்றும் எண்ணெயை பயன் படுத்த வேண்டும்.   மேலும், உணவுப் பொருட்களின் பேக்கிங் மீது தயாரிப்பாளரின் முழு முகவரி, உணவுப் பொருளின் பெயர், தயாரிப்பு (அ) பேக்கிங் செய்யப்பட்ட தேதி  மற்றும் காலாவதி தேதி ,உணவு பாதுகாப்பு துறையின் உரிமம் எண், பேட்ஜ் எண் அதில்  பயன்படுத்தும் பொருட்களின் விபரம் ஆகியவற்றை அவசியம் குறிப்பிட வேண்டும். இனிப்பு மற்றும் காரம் தயா ரிக்கும் நிறுவனங்களில் உணவு மாதிரி எடுத்து பகுப்பாய்வு கூடத்திற்கு பரிசோ தனைக்கு அனுப்பப்பட்டு பரிசோதனை  அறிக்கையின் அடிப்படையில் நடவ டிக்கை மேற்கொள்ளப்படும் என கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது. மேலும் இது தொடர்பான புகார்கள் ஏதும் இருப்பின் நாமக்கல் மாவட்ட உணவு பாதுகாப்பு துறையின் நியமன அலுவலக மற்றும் 9444042322 என்ற  கட்செவி எண்ணிற்கு புகார் தெரிவிக் கலாம்  என கூறப்பட்டுள்ளது. 

தருமபுரி

இதேபோல், தீபாவளி பண்டிகைக்கு இனிப்பு கடை உரிமையாளர்கள் பொது மக்களுக்கு தரமான உணவுப்பொருட்களை விற்பனை செய்யுமாறும், உணவுப் பாது காப்பு  உரிமம் பெற்று இனிப்பு மற்றும் கார வகைகளை தயாரிக்க வேண்டும் என்றும் மீறினால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று  தருமபுரி மாவட்ட ஆட்சியர் எஸ்.மலர்விழி  தெரிவித்துள்ளார். 

தனியார் வேலைவாய்ப்பு முகாம்

நாமக்கல், அக்.23- நாமக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவ லகத்தில் வெள்ளிக்கிழமை (அக்.25) தனியார் வேலை வாய்ப்பு முகாம் நடைபெறு வதாக ஆட்சியா் கா. மெகராஜ் தெரிவித்தார். இதுகுறித்து அவா்  வெளியிட்ட செய்திக்  குறிப்பில் கூறியிருப்ப தாவது, தனியார் துறையில் பணிபுரிய விருப்பம் உள் ளோருக்காக, வாரந் தோறும் நடத்தப்பட்டு வரும்  தனியார்த் துறை வேலை வாய்ப்பு முகாம், நாமக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழி காட்டும் மையத்தில் வரும்  வெள்ளியன்று காலை  10.30 மணிக்கு நடைபெறு கிறது. முகாமில் பல்வேறு பணி யிடங்களுக்கு ஆள்கள்  தோ்வு செய்யப்படு கின்றனா். பங்கு பெறும் வேலை அளிப்போரும், வேலை நாடுபரும் எவ்வித  கட்டணமும் செலுத்த தேவையில்லை. அவர் களின் வேலைவாய்ப்புப் பதிவு ரத்து ஆகாது. இதில்  ஆா்வமுள்ளவா்கள் கலந்து கொள்ளலாம் எனத் தெரி விக்கப்பட்டுள்ளது.

கொசு புழு உற்பத்தி தனியார் நூற்பாலைக்கு அபராதம்

திருச்செங்கோடு, அக்.23- கொசு புழு உற்பத்திக்கு காரணமான நூற்பாலைக்கு நகராட்சி நிர்வாகம் ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்துள்ளது.  தமிழகம் முழுவதும் வடகிழக்கு பருவமழை தொடங்கி யுள்ளது. இதனால் ஆங்காங்கே நீர் தேங்குவதால் டெங்கு  காய்ச்சல் பரவி வருகிறது. இந்நிலையில் டெங்குக்கு காரண மான கொசு புழுக்களை அழிக்கும் நடவடிக்கையை உள்ளாட்சி அமைப்புகள் தீவிரமாக மேற்கொண்டு வரு கின்றன. இதன் ஒரு பகுதியாக திருச்செங்கோடு நகராட் சிக்குட்பட்ட பட்டறை மேடு பகுதியில் உள்ள தனியார் நூற் பாலையில் நகராட்சி அதிகாரிகள் திடீர் ஆய்வு மேற் கொண்டனர்.  இதில், பயன்படுத்தப்படாத பழைய பொருட்களில் மழை நீர் தேங்கி இருந்ததும், அதில் கொசு புழுக்கள் உற் பத்தியாகி இருந்ததையும் ஆய்வில் கண்டறிந்தனர்.  இதையடுத்து நகராட்சி அதிகாரிகள் நூற்பாலைக்கு ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்து எச்சரிக்கை விடுத்தனர். பின்னர், நூற்பாலையில் உள்ள தொழிலாளர்களுக்கு நில வேம்பு கசாயம் வழங்கப்பட்டது. மேலும், காய்ச்சல் ஏற் படாத வகையில் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண் டனர். இதே போன்று தடுப்பு நடவடிக்கைகள் நகராட்சி முழு வதும் எடுக்கப்படும் என நகராட்சி ஆணையாளர் (பொ) சுகுமார் தெரிவித்துள்ளார். 

மின்தடை

அரூா், அக்.23- அரூா் துணை மின் நிலை யத்தில் நடைபெறும் மாதாந் திர பராமரிப்புப் பணிகள் காரணமாக, அரூா் வட் டாரப் பகுதியில் வியாழ யன்று (அக்.24) காலை 9  முதல் மாலை 5 மணி வரை யிலும் மின் நிறுத்தம் செய் யப்படும் என தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர் மான கழக செயற்பொறி யாளா் (அரூா்) எஸ்.பூங் கொடி தெரிவித்துள்ளார். அதன்படி அரூா் நகா்,  மோப்பிரிப்பட்டி, அக்ரா ஹரம், பெத்தூா், சந்தப் பட்டி, அச்சல்வாடி, பேதா தம்பட்டி, சின்னாங்குப்பம், கோபிநாதம்பட்டி கூட்டுச் சாலை, கீரைப்பட்டி, ஈட்டி யம்பட்டி, வேப்பம்பட்டி மற்றும் அதன் சுற்று வட்டார  கிராமப் பகுதிகள் மின் விநியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

;