tamilnadu

img

நாகை திருவள்ளுவன் பிணையில் விடுதலை

கோவை சிறை வாயிலில் உற்சாக வரவேற்பு

கோவை, ஜன. 14-  நடூரில் சுவர் இடிந்து விழுந்து 17 பேர் உயிரிழந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி  கேட்டு போராடியதால் பொய்வ ழக்கு புனையப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட நாகை திருவள் ளுவன் செவ்வாயன்று பிணை யில் விடுதலை செய்யப்பட்டார். கோவை மாவட்டம், மேட்டுப் பாளையத்தில் கடந்த டிசம்பர் 2-ம் தேதி சுவர் இடிந்து 17  பேர் உயிரிழந்தனர். இந்த சம்ப வத்தை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்ட தமிழ் புலிகள் அமைப் பின் தலைவர் நாகை திருவள்ளு வன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில், 43 நாட்கள் சிறை வாசத்திற்குப் பின்னர் செவ்வாயன்று காலை நாகை திரு வள்ளுவன் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார். கோவை மத்திய  சிறை வாசலில் தந்தை பெரியார் திராவிடர் கழக பொதுச்செயலா ளர் கு.ராமகிருஷ்ணன்,மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி மற்றும்  தமிழ் புலிகள் கட்சியினர் நாகை  திருவள்ளுவனுக்கு மேளதாளங் கள் முழங்க உற்சாக வரவேற்பு அளித்தனர். முன்னதாக செய்தியாளர்க ளுக்கு பேட்டியளித்த நாகை திருவள்ளுவன், கடந்த டிசம்பர் 2ம் தேதி மேட்டுப்பாளையத்தில் சுவர் இடிந்து விழுந்து 17 பேர்  உயிரிழந்த சம்பவத்தை காவல் துறை ஒரு விபத்து போல சித்தரித் துள்ளது. ஆனால் தீண்டாமை சுவ ரால் தான் அந்த விபத்து ஏற்பட் டது. ஒடுக்கப்பட்ட மக்களுக்காக போராடும் எங்களை போன்றவர் கள் மீது மாநில அரசு பொய்  வழக்குபதிவு செய்து அடக்குகி றது. மேட்டுப்பாளையம் நடூர் பகுதியில் நடந்த விபத்தில் பாதிக் கப்பட்ட மக்களுக்கு தமிழக அரசு கொடுத்த வாக்குறுதிகளை உடனடியாக நிறைவேற்ற வேண் டும்.  இல்லையெனில் மீண்டும் நடூர் பகுதிக்கு சென்று மக்களை  திரட்டி போராட்டம் நடத்து வோம். மேலும் மத்திய அரசு கொண்டு வந்த குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை திரும்பப் பெற  வேண்டும் என்று கூறினார்.

;