tamilnadu

தனியார் நிறுவன விடுதி காப்பாளர் மர்ம மரணம்

திருப்பூர், ஜன. 17 – திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அருகே ஓலப் பாளையம் பகுதியில் தனியார் நிறுவனத்தில் விடுதிக் காப்பாளராகப் பணியாற்றி வந்த வாசு (59) மர்மமான முறையில் உயிரிழந்தார். அவரது சாவில் சந்தேகம் இருப்பதாகக் கூறி குடும்பத்தார், உறவினர்கள் காங்கேயம் அரசு மருத்துவமனையில் முற்றுகையில் ஈடுபட்டனர். காங்கேயத்தில் இருந்து வெள்ளகோவில் செல்லும் சாலையில் ஓலப்பாளையம் பகுதியில் “டீமேஜ் ப்ரீ காஸ்ட்” எனப்படும் ஆயத்த கட்டுமான சுவர் தயாரிக்கும் தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தில் வெளி மாநிலத் தொழிலாளர்கள் உள்பட  ஏராளமானோர் வேலை செய்து வருகின்றனர். இங்கு வெள்ளகோவில் அருகே நாகமநாயக்கன்பட்டி துண்டுகாடு பகுதியைச் சேர்ந்த வாசு என்பவர் கடந்த ஏழாண்டு காலமாக விடுதிக் காப்பாளராக வேலை செய்து வந்தார். இவருக்கு நிர்மலா என்ற மனைவியும், வினோதினி, ரேணுகாதேவி என்ற இரு மகள்களும் உள்ளனர். மகள்கள் இருவருக்கும் திருமணம் ஆகிவிட்டது. இந்நிலையில் தினமும் வேலைக்குச் சென்று விட்டு இரவு 10 மணியளவில் தனது வீட்டுக்குத் திரும்பும் வாசு, பொங்கல் பண்டிகைக்கு முதல் நாளான ஜனவரி 14ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) இரவு 10 மணிக்கு மேலாகியும் வீட்டுக்கு வர வில்லை. எனவே சுமார் 11 மணியளவில், குடும் பத்தார் அவரது அலைபேசிக்கு தொடர்பு கொண்ட னர். ஆனால் தொடர்பு கிடைக்கவில்லை. இதையடுத்து டீமேஜ்  நிறுவன தொலைபேசி எண்ணுக்கு அழைத்துள்ளனர். அதில் தொடர்பு கொண்டவர், வாசு நிறுவனத்தில்தான் இருக்கிறார் என்று பதில் கூறியிருக்கிறார்.

இதையடுத்து வேலை முடிந்து வாசு தாமதமாக வருவார் என்று கருதி குடும்பத்தார் காத்திருந்தனர். ஆனால் நள்ளிரவு 2 மணிக்கு மேல் திடீரென  டீமேஜ் நிர்வாகத்தார் குடும்பத்தாரை தொடர்பு கொண்டு வாசு விபத்தில் காயமடைந்து காங்கேயம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாக தெரிவித்துள்ளனர். குடும்பத்தார் உடனடியாக காங்கேயம் அரசு மருத்துவமனைக்குச் சென்று பார்த்தபோது, வாசு இறந்து 3 மணி நேரம் ஆகி விட்டதாக மருத்துவர்கள் கூறியதாகத் தெரிவித் தனர். வாசு வீட்டுக்கு வரத் தாமதமான நிலையில் குடும்பத்தாரிடம் தெரிவிக்காமல், திடீரென விபத் தில் காயமடைந்ததாக அரசு மருத்துவமனைக்கு நிர்வாகத்தார் கொண்டு வந்தது ஏன் என்று உற வினர்கள் கேள்வி எழுப்பினர். நிர்வாகத்தரப்பில், இரவு 8 மணியளவில் வாசுவும், வேறொருவரும் சேர்ந்து நிறுவனத்துக்கு வெளியே மதுக்கடைக்குச் சென்று மதுபானம் அருந்திவிட்டு வந்ததாகவும், வரும்போது விபத்தில் சிக்கியதாகவும் கூறியுள்ளனர். நிர்வாகத்தினர் கூறும் விளக்கம் சந்தேகம் அளிப்பதாகவும், மது  அருந்தியவர்களை நிறுவனத்திற்குள் அனுமதிக்கும் வழக்கம் கிடையாது, மேலும் வாசுவுக்கு ஏற்கெனவே நிர்வாகத்தில் பிரச்சனை இருந்து வந்ததாகவும், இந்நிலையில் தொழிற்சாலைக்கு உள்ளேயே வாசுவை அடித்துக் கொலை செய்தி ருக்கிறார்கள் என்றும் உறவினர்கள் குற்றஞ்சாட்டி யுள்ளனர். காங்கேயம் அரசு மருத்துவமனையில் வாசு வின் சடலம் உடற்கூராய்வு செய்யப்பட்டு குடும்பத் தாரிடம் புதன்கிழமை ஒப்படைத்தனர். அவரது சடலம் எரியூட்டப்பட்டது. வெள்ளகோவில் காவல் நிலையத்தில் இவரது மரணம் குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

;