திருப்பூர், நவ. 27 - திருப்பூரில் அதிமுகவைச் சேர்ந்த அன்பகம் திருப்பதி என்பவருக்குச் சொந்தமான ஆடம்பர தங்கும் விடுதிக்கு ஆண்டுக்கு ரூ.2000 மட் டுமே சொத்து வரி விதிக்கப்பட்டுள் ளது. ஏற்கெனவே மாநகராட்சி கவுன் சிலராக இருந்ததுடன், அதிமுக மாண வரணி செயலாளராகவும் இருக்கும் அன்பகம் திருப்பதிக்கு மாநகராட்சி அதிகாரிகள் கரிசனம் காட்டியுள்ளது பொது மக்களை முகம் சுழிக்க வைத் துள்ளது. திருப்பூர் நொய்யல் ஆற்றை ஒட்டி, கஜலட்சுமி திரையரங்க சாலை யில் ஹோட்டல் அன்பகம் ரெசிடன்சி என்ற பெயரில் ஆடம்பர தங்கும் விடுதி கட்டப்பட்டுள்ளது. அதிமுக மாண வரணி செயலாளர் அன்பகம் திருப்பதி என்பவருக்குச் சொந்தமானது இந்த கட்டிடம். கடந்த 2018ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் இந்த ஆடம்பர விடு தியை மாநில கல்வி அமைச்சர் செங்கோட்டையன் திறந்து வைத் தார். மாவட்டத்தைச் சேர்ந்த அமைச் சர் உடுமலை ராதாகிருஷ்ணன் குத்து விளக்கு ஏற்றி வைத்தார். உள்ளூர் ஆளும் கட்சி எம்எல்ஏக்கள் குண சேகரன், விஜயகுமார், கரைப்புதூர் நடராஜன் மற்றும் அதிமுக மாவட்டச் செயலாளர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் உள்பட ஆளும் கட்சி பிரமுகர்கள் இந்த விழாவில் கலந்து கொண்டு ஆடம்பரமான முறையில் விழா நடத்தப்பட்டது. இந்த விழாவுக்காக, நொய்யல் ஆற்றங்கரையில் கஜலட்சுமி தியேட் டர் சாலையோரம் பல ஆண்டு கால மாக வசித்து வந்த நரிக்குறவர் சமூ கத்தினரை மாவட்ட நிர்வாகத்தினர் வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்தி விரட்டிவிட்டனர். அவர்கள் வேறு கதியில்லாமல் மாவட்ட ஆட்சியர கத்திற்கு மனுக் கொடுக்க வந்த போதும் அவர்களை அங்கிருந்து அதி காரிகள் விரட்டிவிட்டனர். ஆளும் கட்சி பிரமுகரின் ஆடம்பர விடுதி திறப்பு விழாவுக்கு அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் வருகிறார்கள் என்ப தற்காகவே இந்த விளிம்பு நிலை மக்களை விரட்டி விடுவதில் மாவட்ட நிர்வாகமும், மாநகராட்சி நிர்வாகமும் விசுவாசத்துடன் செயல்பட்டனர்.
அப்போது காட்டிய விசுவாசம் போதாதென்று, அந்த ஆடம்பரக் கட்டிடத்துக்கு சொத்து வரியும் குடியிருப்பு என்ற வகையினமாகக் காட்டி சுமார் 500 சதுர அடி உள்ள கட்டிடத்துக்கு விதிக்கப்படும் அள வுக்கு மிகக் குறைவாக, ஆண்டுக்கு ரூ.2000 என்று சொத்து வரி விதிக் கப்பட்டுள்ளது. திருப்பூர் மாநகராட்சியில் ஏ, பி, சி என நகரின் பகுதிகள் வரைய றுக்கப்பட்டுள்ளன. இதில் கஜலட்சுமி தியேட்டர் சாலை நகரின் மிக மைய மான பகுதியாக ஏ பிரிவில் வரக்கூடிய தாகும். அத்துடன் சொகுசு விடுதி வணிக அடிப்படையிலான கட்டிடம் என்ற முறையில் சொத்து வரி விதிக்க வேண்டும். அந்த கட்டிடத்தின் பரப்பளவு, இருக்கும் பகுதி ஆகிய வற்றைக் கணக்கில் கொண்டால் ஆண்டு சொத்து வரி லட்சம் ரூபாய்க்கு குறைவில்லாமல் விதிக்க வேண்டியிருக்கும். ஆனால் ரூ.2000 என்று மிக, மிகக் குறைவாக வரி விதித்தி ருப்பது அதிகாரிகள் ஆளும் கட்சியினருக்கு வளைந்து கொடுத்திருப்பதைக் காட்டுவதாக உள்ளது. இதைப் பற்றி மாநக ராட்சி வருவாய்ப் பிரிவி னரிடம் விசாரித்தபோது, அது பழைய கட்டிடமாக இருந்தபோது விதிக்கப்பட்ட வரியாகும். இப்போது புதிய வரி விதிப்புக்கு விண்ணப் பித்துள்ளனர். அதன் அடிப் படையில் புதிய வரி விதிக் கப்படும் என்று தெரிவித்த னர்.
எனினும் அன்பகம் திருப்பதி ஏற்கெனவே கேவி ஆர் நகர் பகுதி மாநக ராட்சி கவுன்சிலராக இருந்த வர். அதிமுக மாணவரணி செயலாளர் பதவியில் இருப்பதுடன் அமைச்சர், எம்எல்ஏ உள்ளிட்டோருக்கும் நெருக்கமான வர். கவுன்சிலராக இருந்தபோது நகரமைப்பு பிரிவுக்கான குழுவுக்குத் தலைவராக இருந்தார். எனவே மாந கராட்சி அதிகாரிகளுடன் பல வழி களில் “நெருக்கமாக” இருந்தவர் என் றும் அதிமுகவினரே தெரிவித்தனர். அதனால்தான் அவரது கட்டி டத்துக்கு குறைவான வரி விதித்து விசுவாசம் காட்டியுள்ளனர் என்றும் தகவல் அறிந்தவர்கள் கூறினர்.
மாநகரில் கடந்த மூன்றாண்டு களுக்கு மேலாக உள்ளாட்சி மக்கள் பிரதிநிதிகள் இல்லாத நிலையில், ஆளும்கட்சியின் எம்எல்ஏக்கள் மட்டுமின்றி முன்னாள் கவுன்சிலர்க ளும் தற்போது பதவியில் இருக்கும் தோரணையில் தான் நடந்து கொள் கின்றனர். அதிகாரிகளும் ஆளும் கட்சியினருக்கு தலையாட்டிகளாக பணிந்து செயல்படுகின்றனர். மாந கரில் சொத்து வரி சீராய்வு செய்து பத்தாண்டு காலம் ஆகிறது என்று சொல்லி, வரியை உயர்த்துவதாக மாநகராட்சி அதிகாரிகள் தன்னிச் சையாக செயல்பட்டு சாமானிய, நடுத்தர மக்களின் கட்டிடங்களுக்குத் தாறுமாறாக கட்டணத்தை உயர்த்தி னர். ஐநூறு, ஆறநூறு சதுர அடி கூட இல்லாத கட்டிடங்களுக்கு பத்தாயிரம், இருபதாயிரம் என வரி விதிக்கப்பட்டது. இன்னும் கூட 17 ஆயிரம் கட்டிடங்களுக்கான சொத்து வரி முன்னூறு சதவிகிதம், நானூறு சதவிகிதம் என உயர்த்தப்பட்டு கணி னியில் பதிவேற்றி உள்ளனர். இது ஒருபுறம் இருக்க தமிழக அரசும் 50, 100 சதவிகிதம் என வரியை உயர்த்தி அறிவித்தது. ஒன்றுக்கு இரண்டாக ஏற்கெனவே அதிகாரிகள் தன்னிச்சையாக வரியை உயர்த்தியது மட்டுமின்றி, தமிழக அரசு உத்தர வைக் காரணம் காட்டியும் பலருக்கு இந்த வரி உயர்வும் செய்யப்பட்டது.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உள்பட பல்வேறு அரசியல் கட்சிக ளும் இதை எதிர்த்து தொடர்ச்சியாகப் போராட்டம் நடத்திய நிலையில் ஒரு பகுதி வரி உயர்வு சீரமைக்கப்பட்டது. உயர்த்தப்பட்ட வரியை செலுத்த வேண்டியதில்லை என உறுதியளித்த அதிகாரிகள், தனிப்பட்டவர்கள் வரி கட்டச் செல்லும்போது உயர்த் திய வரியை கட்டுங்கள் என கட்டா யப்படுத்துவதும் தொடர்ந்தது. இவ்வாறு திருப்பூர் மக்களிடம் சொத்து வரி வசூலிப்பதில் சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு செயல்ப டாமல் தன்னிச்சைப் போக்கைக் கடைப்பிடித்த அதிகாரிகள் ஆளும் கட்சிக்காரருக்கு மட்டும் இதுபோல் கரிசனம் காட்டியிருப்பது மக்களிடம் கடும் கோபத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்த ஒரு சம்பவம் வெளிப்ப டுத்தும் முறைகேட்டைக் கருத்தில் கொண்டு நகர் முழுவதும் செல்வாக் குப் படைத்தவர்கள், ஆளும் கட்சி பிர முகர்கள் உள்ளிட்டோரின் சொத்து வரி இனங்களுக்கு விதிக்கப்பட்டி ருக்கும் வரியைப் பற்றிய விபரத்தை யும், உண்மைத் தன்மையையும் மாநில அரசு நிர்வாகம் சுயேட்சையான முறையில் ஆய்வு செய்ய வேண்டும். முறைகேடு செய்திருந்தால் தொடர் புடைய அதிகாரிகள் மீது கடும் நட வடிக்கை எடுக்க வேண்டும். வருவாய் இழப்பை சரி செய்ய இது போன்ற முறைகேடுகளைத் தடுப்பதுடன், சரியான முறையில் வரி விதிக்க வேண்டும். அப்பாவிகளை வதைப் பதைக் கைவிட வேண்டும் என்றும் மக்கள் கூறுகின்றனர். - (ந.நி)